சத்யநாராயண சிறீகாந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யநாராயணா சிறீகாந்தா
Sathyanarayana Srikanta
குடியுரிமைஇந்தியா
பணியிடங்கள்ஆர்வார்டு மருத்துவப் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்

சத்யநாராயண சிறீகாந்தா (Sathyanarayana Srikanta) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். உட்சுரப்பியல் துறையில் ஆராய்ச்சியாளராக இவர் அறியப்படுகிறார். 1993 ஆம் ஆண்டு முதல் இவர் இந்தியாவின் பெங்களூரில் உள்ள சமத்துவம் உட்சுரப்பியல் நீரிழிவு மையம்[1] மற்றும் ஞான சஞ்சீவினி மருத்துவ மையம் ஆகியவற்றில் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.[2] 29 வயதில் ஆர்வர்ட்டு மருத்துவப் பள்ளியில் ஆசிரியராகவும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆய்வாளராகவும் ஆனார்.

கல்வி[தொகு]

சத்யநாராயண சிறீகாந்தா இந்தியாவின் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உள் மருத்துவத்தில் முதுநிலை மருத்துவம் படிப்பை முடித்தார். அமெரிக்க உட்சுரப்பியல் கல்லூரியில் இவர் உறுப்பினராகவும் உள்ளார்.[3]

பொதுவாழ்க்கை[தொகு]

கடந்த முப்பது ஆண்டுகளாக சமத்துவம் அறக்கட்டளையில்[4] திசா, தோசுட்டி[5] மற்றும் தீபா [6] ஆகிய பெயர்களின் மூலம் தனது பங்களிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gundu H.R. Rao. "Need for a national platform in India, for effective management and prevention of NCDs". ypchronic.org. Archived from the original on 2015-11-23.
  2. Greenberg, Riva (2014-09-10). "Corruption and Culture Increase Diabetes Deaths in India". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  3. "Dr. Sathyanarayana Srikantha". fbae.org/.
  4. "The barefoot doctor who has caused a 1,000 healthy smiles - Bangalore Mirror -". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  5. "A dose of aid for those in need". The Hindu. 7 March 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article1807260.ece. 
  6. "Ray of hope for poor young diabetics". The Hindu. 4 August 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Ray-of-hope-for-poor-young-diabetics/article15272187.ece. பார்த்த நாள்: 18 December 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யநாராயண_சிறீகாந்தா&oldid=3781773" இலிருந்து மீள்விக்கப்பட்டது