சச்சினி அயேந்திரா ஸ்டென்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சினி அயேந்திரா ஸ்டென்லி
பிறப்புசச்சினி அயேந்திரா ஸ்டென்லி
கண்டி, இலங்கை
மற்ற பெயர்கள்சச்சினி அயேந்திரா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்சமயம் வரை

சச்சினி அயேந்திரா ஸ்டென்லி (Sachini Ayendra Stanley; சிங்களத்தில்: සචිනි අයේන්ද්‍රා ස්ටැන්ලි),[1] இலங்கை திரைப்பட நடிகை. சிங்கள திரைப்படத்துறையில் தற்சமயம் பணிபுரிகின்றார். 2003 ஆம் ஆண்டு மிஸ் இலங்கை அழகியாக மகுடம் சூடினார். சீனாவில்வில் நடைபெற்ற 53வது உலக அழகி அணிவகுப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை அழகிப் பட்டத்தை வென்ற பின் சினேஸ் திசாநாயக்க பண்டார இயக்கிய ஆதரனி வசன்னயா திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தார். இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இதற்காக சிறந்த துணை நடிகைக்கான சிக்னீஸ் இலங்கை திரைப்பட விருதை வென்றார்.

2005 இல் குமரசிரி அபேகோன் இயக்கிய சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிருணி என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலமாக தொலைக்காட்சியில் அறிமுகமானார். 2009 இல் இந்து தர்மசேன இயக்கத்தில் சரளா என்ற பாத்திரத்தில் போர் பெட்டர் போர் வெர்ஸ் என்ற மேடை நாடகத்தில் நடித்தார். சச்சினி 2016 இல் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் உலக வாகையாளர் இல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், ஒரு வெண்கல பதக்கமும் வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சச்சினி அயேந்ரா இலங்கையில் கண்டியில் பிறந்தார். டேவிட் ஸ்டென்லி, தாரன வடசிங்க ஆகியோரின் இளைய மகளாவார். கண்டியில் ஹில்வுட் கல்லூரியில் கல்வி கற்றார். கலைத்துறையில் உயர்கல்வி கற்றார். பாடசாலையில் கற்கும் போதே இளம் எழுத்தாளர் சங்கம், பாடசாலை விவாத அணி, ஆங்கில் இலக்கிய சங்கம், நீச்சல் போட்டிகள் ஆகியவற்றில் பங்குபற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு கண்டியில் நடந்த வடிவழகிகளின் அணிவகுப்பில் சிறந்த வடிவழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு மிஸ் இலங்கை அழகி அணிவகுப்பில் மகுடம் சூடினார். அதே ஆண்டில் உலக அழகி அணிவகுப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] சச்சினி பாடசாலை கல்வியை நிறைவு செய்தபின் வடிவழகு கற்கை நெறியை பூரணப்படுத்தினார்.

பணி[தொகு]

2002 ஆம் ஆண்டில் சிறந்த வடிவழகி விருதை வென்ற பின் தனது வடிவழகு பணியை துவங்கினார். பல விளம்பரங்களில் மாதிரியாக பணிபுரிந்துள்ளார். தனது நடிப்பு பணிக்காகவும், வடிவழகு பணிக்காகவும் கொழும்புக்கு குடி பெயர்ந்தார். ஆதரனி வசன்னய திரைப்படத்தில் நடித்தமையால் புகழ் பெற்றார். சங்கரா திரைப்படத்தில் ஏழை கிராமத்து பெண்ணாக நடித்தார். ஹார்ட எப்எம் திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தார். ஆதரனிய வசன்னய திரைப்படத்திற்காக சரசவிய விருது மற்றும் ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

நடிகை[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புக்கள்
2003 அட்ரனேயேய வஸானய வெற்றியாளர் , சிக்ஸின் ஸ்ரீலங்கா திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகை



சாராசியா விருதுக்கு சிறந்த துணை நடிகை பரிந்துரைக்கப்பட்டார்



பரிந்துரைக்கப்பட்டார், ஜனாதிபதி திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகை
2006 சங்கர உபமாலி வெற்றியாளர் , சிக்ஸின் ஸ்ரீலங்கா திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகை
2007 ஹார்ட் எஃப் சக்யா
2010 அங்காரா டங்கரா நதி
2013 ஸ்ரீ பாக்குகம் யோனகா
2017 ஸ்வர நிமந்தி கமகே
2017 நிம்னாக்க ஹூடகலாவா விளம்பர நிர்வாகி
அறிவிக்கப்படும் தானபத்தியிலே கெடரா [4]

தயாரிப்பாளராக[தொகு]

  • 2010 - அங்கர டங்கர

தொலைக்காட்சி நாடகங்கள்[தொகு]

ஆண்டு டிராமா இயக்குனர்
2005 மாயாதுன்னே ரத்னசிரி பரணவிதான
2005 ரலா பின்டனா தேனா செனெஷ் பண்டார திஸாநாயக்க
2005 லோசனா சஞ்சய மகாவிதான
2005 ஹிருனி குமாரசிரி அபேகோன்
2006 கம்பியா விலா தர்மசேன பாத்திராஜா
2006 சாரங்கானா துவா மாலினி பொன்சேகா
2008 ஷெர்லாக் ஹோம்ஸ் சஞ்சியா நிர்மல்
2009 சிட்டு தியானியோ மோகன் நியாஸ்
2009 சீஹின நந்தந்தயக் சாரங்கா மெண்டிஸ்
2011 ரன் சமனாலோ சாந்தருவன் ஜானகிராமரா
2017 ருமஸ்ஸலா பூடீ கீர்த்திசேனா

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.imdb.com/name/nm2704084/ பார்த்தநாள் 2017-03-09
  2. http://www.topssrilanka.com/spotarticle1-sachini-ayendra.html 19-12-2007 SaNDun
  3. http://life.dailymirror.lk/article/interviews/Sachini/52/15351 பரணிடப்பட்டது 2019-01-30 at the வந்தவழி இயந்திரம் daily mirror பார்த்த நாள் 3-04-2018
  4. "Film Thaanapathilage Gedara". Sarasaviya. Archived from the original on 12 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]