சங்கை எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சங்கை எக்ஸ்பிரஸ்
The Sangai Express
வகைதினசரி நாளிதழ்
வடிவம்தாள்
மொழிஆங்கிலம், மணிப்புரி
தலைமையகம்மணிப்பூர்
இணையத்தளம்www.thesangaiexpress.com

த சங்கை எக்ஸ்பிரஸ் (The Sangai Express) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரில் வெளியாகும் நாளிதழ். இது ஆங்கிலத்திலும் மணிப்புரிய மொழியிலும் வெளியாகிறது. மணிப்புரிய மொழிப் பதிப்பு பெங்காலி எழுத்துகளில் எழுதப்படுகிறது. இதன் தலைமையகம் இம்பாலில் உள்ளது. இது மணிப்புரில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாளேடு [1]. உள்ளூர்ச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டு, அயலகவாழ் மக்கள், கல்வி பற்றிய செய்திகளும் சிறுகதைகளும் கவிதைகளும் வெளியிடப்படுகின்றன.

குகி பழங்குடி மக்களால் பரவலாகப் படிக்கப்படுகின்றது. ஹாவ்ரங் கைரல். திங்சட் கொலை நிகழ்வுகளை ஒருதலைச் சார்புடன் வெளியிட்டதால் 2015 மே 17ல் குகி மாணவர் அமைப்பால் தடை செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அலுவல் இணையதளம் (ஆங்கிலம்)". Archived from the original on 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  2. KSO bans The Sangai Express, ISTV
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கை_எக்ஸ்பிரஸ்&oldid=3907842" இலிருந்து மீள்விக்கப்பட்டது