சகாப்-உத்-தின் விர்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகாப்-உத்-தின் விர்க்கு (Shahab-ud-Din Virk) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கான் பகதூர் சௌத்ரி சர் சகாப்-உத்-தின் விர்க்கு என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞராகவும் பிரித்தானிய இந்தியாவின் அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சௌத்ரி சகாப்-உத்-தின் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் இருந்த சியால்கோட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விர்க்கு பழங்குடி [1] முசுலீம் இயாட்டு குடும்பத்தில் இவர் பிறந்தார். [2]

லாகூரில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1912 ஆம் ஆண்டில் இலாகூர் நகராட்சிக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்ட சபையின் சட்டமன்றக் குழுவின் உறுப்பினரானார். மேலும் 1925 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ந்து மூன்று முறை இக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] 1930 ஆம் ஆண்டு புத்தாண்டு விருதுகள் பட்டியலில் பட்டம் பெற்றார். [4] 1936 ஆம் ஆண்டில் சட்டமன்றக் குழு பஞ்சாப் சட்டமன்றத்தால் மாற்றப்பட்டது, மேலும் சகாப்-உத்-தின் விர்க்கு 1937 மற்றும் மார்ச் 1945 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சட்டமன்றத்தின் சபாநாயகராக பணியாற்றினார் [5] 1946 ஆம் ஆண்டு இலாகூரில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Talbot, I. (2013). Khizr Tiwana, the Punjab Unionist Party and the Partition of India. Taylor & Francis. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-79029-4. https://books.google.com/books?id=KtJcAgAAQBAJ. பார்த்த நாள்: 2023-07-24. "Sir Shahabuddin was a Virk Jat" 
  2. Contemporary Problems of Pakistan. Brill. 2022. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-47468-0. https://books.google.com/books?id=uJxjEAAAQBAJ. பார்த்த நாள்: 2023-07-24. "Chaudhury Sir Shahabuddin, a Jat from Sialkot District" 
  3. The Punjab Parliamentarians 1897-213, Provincial Assembly of the Punjab, Lahore - Pakistan, 2015
  4. The Edinburgh Gazette, 7 January 1930.
  5. The Punjab Parliamentarians 1897-213, Provincial Assembly of the Punjab, Lahore - Pakistan, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாப்-உத்-தின்_விர்க்கு&oldid=3848330" இலிருந்து மீள்விக்கப்பட்டது