க. ந. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. ந. இராமச்சந்திரன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
1967–1971
தொகுதிஆண்டிமடம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மார்ச்சு 1930 (1930-03-04) (அகவை 94)
உடையார்பாளையம், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)செயங்கொண்ட சோழபுரம், தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிஅரசுக் கல்லூரி, கும்பகோணம், பச்சையப்பன் கல்லூரி, சென்னை

க. ந. இராமச்சந்திரன் (K. N. Ramachandran)(பிறப்பு மார்ச் 4, 1930) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, இவர் அரசுக் கல்லூரிகளில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார். இவர் பேராசிரியராக இருந்த காலத்தில், தேசிய மாணவர் படையில் படைத்தலைவராக இருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் பட்டம் பெற்றார். இவரது நெருங்கிய நண்பரும் வகுப்புத் தோழருமான முரசொலி மாறன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமானவர் ஆவார். கல்லூரியில் இராமச்சந்திரனின் சமகாலத்தவர்களாக நாஞ்சில் கி. மனோகரன் மற்றும் மருத்துவர் சொக்கலிங்கம் இருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் க. அன்பழகன் இவருடன் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இராமச்சந்திரன் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவை 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்படாத புத்தகங்களாக அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பற்றியவையாகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ந._இராமச்சந்திரன்&oldid=3830682" இலிருந்து மீள்விக்கப்பட்டது