கௌதமி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌதமி எக்ஸ்பிரஸ் என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது துறைமுக நகரமான காக்கிநாடாவினை, செகந்திரபாத் நகரத்துடன் ரயில் பாதை மூலம் இணைக்கும் ரயில் சேவை ஆகும்.[1] கோதாவரி நதியின் உபநதியான கௌதமி நதியினைக் குறிக்கும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. இதன் வண்டி எண்கள் 12737, 12738.

வரலாறு[தொகு]

தெற்கு மத்திய ரயில்வேயின் பெருமைமிக்க ரயில்களில் கௌதமி எக்ஸ்பிரஸும் ஒன்று. இது ஹைதராபாத்தினை, காக்கிநாடா துறைமுகப்பட்டினத்துடன் இணைக்கிறது. 7047 மற்றும் 7048 என்று வண்டி எண்ணுடன் செயல்பட்டு வந்த இந்த ரயில்சேவை, 2007 ஜூலை மாதத்தில் அதிவிரைவு ரயில்சேவையாக மாற்றப்பட்டது. அதிலிருந்து 12737 மற்றும் 12738 என்ற வண்டி எண்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் பயணிகள் முழுவதும் நிரம்பிய ரயிலாகவும், 24 ரயில் பெட்டிகளைக் கொண்டு செயல்படும் நீளமான ரயில்களுள் ஒன்றாகவும் கௌதமி எக்ஸ்பிரஸ் விளங்குகிறது.

ஆந்திர பிரதேசத்தின் டெல்டா பகுதிகளை, ஆந்திராவின் தலைநகருடன் இணைப்பதில் முக்கியப்பங்கு கௌதமி அதிவிரைவு ரயிலுக்கு உண்டு. இது 3/10/1987 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் சகோதரி ரயிலாகவே பாவிக்கப்படுகிறது. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கோதாவரி எக்ஸ்பிரஸ் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் பகுதிகளுக்கு இடையே செயல்பட்டது.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)[2]

கடந்த

தொலைவு

நாள் பாதை
1 காக்கிநாடா

துறைமுகம் (COA)

தொடக்கம் 20:20 0 0 கி.மீ 1 1
2 காக்கிநாடா

நகரம் (CCT)

20:28 20:33 5 நிமி 2 கி.மீ 1 1
3 சமல்கோட்

சந்திப்பு (SLO)

20:49 20:50 1 நிமி 15 கி.மீ 1 1
4 துவாரபூடி

(DWP)

21:10 21:11 1 நிமி 45 கி.மீ 1 1
5 ராஜமுந்திரி

(RJY)

21:35 21:40 5 நிமி 65 கி.மீ 1 1
6 கொவ்வூர்

(KVR)

21:52 21:53 1 நிமி 72 கி.மீ 1 1
7 நிடதவோலு சந்திப்பு

(NDD)

22:06 22:07 1 நிமி 87 கி.மீ 1 1
8 தாடேபள்ளிகூடம்

(TDD)

22:22 22:24 2 நிமி 107 கி.மீ 1 1
9 ஏலூரு

(EE)

22:56 22:57 1 நிமி 155 கி.மீ 1 1
10 விஜயவாடா சந்திப்பு (BZA) 00:15 00:30 15 நிமி 214 கி.மீ 2 1
11 மதிரா

(MDR)

01:22 01:23 1 நிமி 271 கி.மீ 2 1
12 கம்மம்

(KMT)

01:48 01:50 2 நிமி 316 கி.மீ 2 1
13 டோர்னக்கல்லு சந்திப்பு (DKJ) 02:13 02:14 1 நிமி 338 கி.மீ 2 1
14 மஹபூபாபாத்

(MABD)

02:34 02:35 1 நிமி 362 கி.மீ 2 1
15 நேகொண்டா

(NKD)

02:50 02:51 1 நிமி 393 கி.மீ 2 1
16 வாரங்கல்

(WL)

03:28 03:29 1 நிமி 423 கி.மீ 2 1
17 காஸிபேட்

சந்திப்பு (KZJ)

03:44 03:45 1 நிமி 433 கி.மீ 2 1
18 ஜங்காவுன்

(ZN)

04:29 04:30 1 நிமி 481 கி.மீ 2 1
19 அலேர்

(ALER)

04:50 04:51 1 நிமி 495 கி.மீ 2 1
20 போங்கிர்

(BG)

05:14 05:15 1 நிமி 518 கி.மீ 2 1
21 செகந்திராபாத்

சந்திப்பு (SC)

06:35 முடிவு 0 565 கி.மீ 2 1

வண்டி எண் 12737[தொகு]

இது காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து, செகந்திராபாத் சந்திப்பு வரை இயக்கப்படுகிறது. 10 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 19 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 54 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 563 கிலோ மீட்டர் தொலைவினை 10 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களில் கடக்கிறது. இது காக்கிநாடா துறைமுகம் மற்றும் செகந்திராபாத் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 89 ரயில் நிறுத்தங்களில் 19 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் தாமதமாகவும், சென்றடையும் நேரத்தில் 29 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.

வண்டி எண் 12738[தொகு]

இது செகந்திராபாத் சந்திப்பில் இருந்து காக்கிநாடா துறைமுகம் வரை செயல்படுகிறது. 10 மணி நேரம் 15 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 19 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 54 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 563 கிலோ மீட்டர் தொலைவினை 10 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது. செகந்திராபாத் சந்திப்பு மற்றும் காக்கிநாடா துறைமுகத்திற்கு இடைப்பட்ட 89 ரயில் நிறுத்தங்களில் 19 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக இரு நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 50 நிமிடங்கள் விரைவாக அடையும் தன்மையினையும் கொண்டுள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.indianrail.gov.in/cgi_bin/inet_trnnum_cgi.cgi
  2. "Goutami Express Train 12737 stoppage". cleartrip.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.
  3. "Goutami Express Train 12738". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதமி_விரைவுவண்டி&oldid=3759997" இலிருந்து மீள்விக்கப்பட்டது