கோ கெர்

ஆள்கூறுகள்: 13°46′30″N 104°32′50″E / 13.77500°N 104.54722°E / 13.77500; 104.54722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ கெர்
កោះកេរ្តិ៍
கோ கெர் கோயில் வளாகத்தில் கணப்படும் ஒரு கோயில்
Koh Ker is located in கம்போடியா
Koh Ker
Koh Ker
Location in Cambodia
இருப்பிடம்பிரே விகார், கம்போடியா
ஆயத்தொலைகள்13°46′30″N 104°32′50″E / 13.77500°N 104.54722°E / 13.77500; 104.54722
வகைதொல்லியல் களம்
வரலாறு
கட்டுநர்நான்காம் செயவர்மன்
கட்டுமானப்பொருள்செங்கல், மணற்கல், செந்நிறக் களிமண்
கட்டப்பட்டது921 பொ.ச.
காலம்நடுக்காலம்
பகுதிக் குறிப்புகள்
நிலைஇடிந்த நிலை
பொது அனுமதிஅனுமதி உண்டு

கோ கெர் ( Koh Ker) என்பது கம்போடியாவில் உள்ள தொலைதூர தொல்பொருள் தளமாகும். இது வடக்கு கம்போடியாவின் சியெம் ரீப் மற்றும் அங்கோர் பழங்காலத் தளத்திலிருந்து 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. காடுகள் நிறைந்த பகுதியான இங்கு மக்கள்தொகை குறைவாகவே உள்ளது. 81 சதுர கிலோமீட்டர் (31 சதுர மைல்) பாதுகாக்கப்பட்ட பகுதியில் 180க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் காணப்பட்டன.[1](p13) பெரும்பாலான நினைவுச்சின்னங்கள் காட்டுக்குள் மறைந்திருப்பதாலும், முழுப் பகுதியிலும் மிதிவெடிகள் அகற்றப்படாததாலும் சுமார் பன்னிரெண்டு நினைவுச்சின்னங்களை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியும்.

கோ கெர் என்பது கெமர் பேரரசின் முக்கியமான நகரத்தின் நவீன பெயராகும். கல்வெட்டுகளில் இந்த நகரம் 'இலிங்கபுரம்' ( இலிங்கங்களின் நகரம்) அல்லது சோக் கார்க்யார்[2]:70 [3] அல்லது 'இரும்பு மரக் காடு' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1](pp8–9)

நான்காம் செயவர்மன், இரண்டாம் ஹர்ஷவர்மன் ஆகிய கோ கெர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் சிலகாலம் முழு பேரரசின் தலைநகராக இருந்தது ( பொ.ச. 928 – 944 ). செயவர்மன் ஒரு லட்சிய கட்டிடத் திட்டத்தை செயல்படுத்தினார். அவரது ஆட்சியில் ஒரு பெரிய தண்ணீர் குளமும், சுமார் நாற்பது கோவில்களும் கட்டப்பட்டன. மிக முக்கியமான கோவில் வளாகம்‑ சிக்கலான, ஒரு இரட்டை சரணாலயம் (பிரசாத் தோம் / பிராங்), இது ஒரு நேர்கோட்டுத் திட்டத்தைப் பின்பற்றுகிறது. மேலும், கெமர் மன்னர்களின் பெரும்பாலான கோயில்களைப் போல ஒரு செறிவான ஒன்றல்ல. 36-மீட்டர் (118 அடி) உயரம் கொண்ட ஏழு-அடுக்கு பிரமிடு, இது பெரும்பாலும் செயவர்மனின் சொந்தக் கோயிலாகச் செயல்பட்டது.[4]:103 இரண்டு மீட்டர் 6 அடி 7 அங்குலம் உயரமான இலிங்கங்களைக் கொண்ட சன்னதிகளும் மிகவும் பிரமிக்க வைக்கின்றன.

இந்தத் தளம் சியெம் ரீப்பிலிருந்து இரண்டரை மணிநேரம் தொலைவில் உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் தங்க 10 கி.மீ அருகிலுள்ள செயோங் கிராமத்திலிருக்கும் விருந்தினர் இல்லங்களில் தங்கலாம். 2009 ஆம் ஆண்டு கோ கெர் கிராமத்தில் கட்டப்பட்ட நிலையான சுற்றுலாத் திட்டமான கோ கெர் வன விடுதியிலும் பயணிகள் தங்கலாம். வருகைக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கோ கெர் சமூகம் மே 2019 இல் கிராமத்தில் ஒரு அடிப்படை மர சமூக ஓய்வு இல்லத்தைத் திறந்துள்ளது.

1992 முதல் கோ கெர் தளம் யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ளது.[5]

கோ கெரின் இடிபாடுகளில் காணப்பட்ட பண்டைய கல்வெட்டு
கோ கெரில் உள்ள கோபுரம்
பிரம்மா சிலை, கோ கெர் பாணி, 925-950 பொ.ச. முசி குய்மெட், பாரிஸ்
கோ கெரில் உள்ள ஏழு அடுக்கு பிரமிடின் காட்சி
பிரசாத் பிரம்
பிரசாத் கிராச்சப் கோயிலின் இடிபாடுகள்

பிரசாத் நெயாங் குமௌ[தொகு]

பிரசாத் நேயாங் குமாவ் கோயிலின் நெருப்புப் படிந்த சுவர்களின் காட்சி

10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலான பிரசாத் நெயாங் குமௌ கோயில்,[6] பிரதான கோ கெர் பிரமிடின் தெற்கே 12.5 கிமீ (7.8 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது மணற்கற்கலாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது.[7] தீயினால் சேதமடைந்த (கருப்பு) வெளிப்புற மேற்பரப்பு அதன் பெயரைக் கொடுத்திருக்கலாம். (நெயாங் குமௌ என்றால் கெமரில் "கருப்பு பெண்" என்று பொருள்). [8]

கோவிலின் பெயர் "கருப்பு கன்னி" என்றும் கூறப்படுகிறது. மேலும் இது ஒரு காலத்தில் அழிவின் இருண்ட தெய்வமான காளிக்கு சொர்க்கமாக இருந்திருக்கலாம் என்று புராணக்கதை கூறுகிறது. [9]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Csaba Kàdas (2010). Koh Ker, Shortguide. Budapest: Hunincor. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-963-08-0470-7.
  2. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  3. Jolyon Ralph & Ida Chau. "Hematite from Cambodia". பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
  4. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  5. "Le site de Koh Ker" (in பிரெஞ்சு). UNESCO World Heritage Centre. 9 January 1992. பார்க்கப்பட்ட நாள் 29 March 2013.
  6. Asian Historical Architecture. "Prasat Neang Khmau Temple, Koh Ker, Cambodia". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  7. Tourism Cambodia. "Neang Khmao Temple - Takeo". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  8. Asian Historical Architecture. "Prasat Neang Khmau Temple, Koh Ker, Cambodia". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  9. Tourism Cambodia. "Neang Khmao Temple - Takeo". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.Tourism Cambodia.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_கெர்&oldid=3696952" இலிருந்து மீள்விக்கப்பட்டது