கோபால் பிரசாத் சிங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் பிரசாத் சிங்கா
Gopal Prasad Sinha
பிறப்புபட்னா, பீகார், இந்தியா
பணிநரம்பியல் நிபுணர்
அறியப்படுவதுநரம்பியல் துறையில் சேவை
வாழ்க்கைத்
துணை
இந்திரா சிங்கா
பிள்ளைகள்அசய் அலோக்கு, செய சிங்க குமாரா
விருதுகள்பத்மசிறீ

கோபால் பிரசாத் சிங்கா (Gopal Prasad Sinha) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நரம்பியல் நிபுணர் ஆவார். [1] ஓர் அரசியல்வாதி [2] என்றும் அறியப்படும் இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன நெறிமுறைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[2] [3] இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பிறந்து வளர்ந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவராகவும் அறியப்படுகிறார். [4] 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய சனதா தளம் வேட்பாளராக பாட்னா சாகிப்பு தொகுதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சிங்காவுக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [5]

சிங்கா ஒரு கல்வியாளரான மறைந்த இந்திரா சிங்காவை மணந்தார். இவர்களுக்கு செய சிங்கா கும்ரா என்ற மகளும், பீகாரில் இருந்து அறியப்பட்ட அரசியல்வாதியான அசய் அலோக்கு என்ற மகனும் உள்ளனர். [6] மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக 2004 ஆம் ஆண்டு நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sehat". Sehat. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  2. 2.0 2.1 "Hindustan Times". Hindustan Times. 19 March 2014. Archived from the original on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  3. "ICMR" (PDF). Indian Council of Medical Research. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  4. "Patna University". Patna University. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  5. "Mahachaupal: JDU candidate Dr Gopal Prasad Sinha's agenda for Patna Sahib". YouTube video. Inext Live. 2 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  6. "Economic Times". Economic Times. 15 May 2014. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  7. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.


 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_பிரசாத்_சிங்கா&oldid=3772078" இலிருந்து மீள்விக்கப்பட்டது