கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூரில் உள்ள கோட்டை வெங்கடரமணா கோயிலின் கோபுரம் மற்றும் விமானம்
கோட்டை வெங்கடரமணா கோவிலில் உள்ள ஒரு சன்னதிக்கு மேல் அமைந்துள்ள விமானம் (கோபுரம்)

கோட்டை வெங்கடரமணா கோயில் இந்தியாவின் பெங்களூரு கிருஷ்ணராஜேந்திர சாலையில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது வெங்கடேஸ்வரர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக் கோயிலின் அமைப்பு, திராவிட பாணி, விஜயநகர காலத்திய கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றி 1689 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை, அப்போதைய மைசூர் [1]ஆட்சியாளராக இருந்த சிக்க தேவராச உடையார் கட்டியுள்ளார்.

கோயில் திட்டம்[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெங்கடரமணா கோயில் பழைய கோட்டையின் அருகே இருந்தது. ("கோட்டை" என்பது கன்னட மொழியில் "கோட்" என அழைக்கப்படுகிறது. ) இது, ஒரு காலத்தில் மைசூர் வோடியார் அரச குடும்பத்தின் வசிப்பிடமாக இருந்தது. பின்னர் மைசூர் இராச்சியத்தின் பிற்கால ஆட்சியாளரான திப்பு சுல்தானின் அரண்மனையாக மாறியது. [2] இக் கோயிலின் ஒரு கருவறை மைய மண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன், முன் கூடம் , கருவறை ஆகியவற்றின் சுவர்களில் ஓவியங்கள் காணப்படவில்லை. ஆனால் கருவறையில் உறைந்திருக்கும் தெய்வ சிற்பங்களின் வரிசைக்கு ஏற்றாற்போல், ஒட்டுமொத்தமாக கோயில் மிதமான அலங்கார வேலைகளை வெளிப்படுத்துகிறது. மைசூரில் உள்ள அரண்மனை வளாகத்திற்குள் உள்ள கோயில்களில் பயன்படுத்தப்படும் பொதுவான திட்டத்தை இக் கோயிலின் கட்டிடக்கலை பாணி பின்பற்றுகிறது. இந்த மண்டபத்தின் நான்கு திசைகளிலும் யாளிகளுடன் (இந்து புராணத்தில் சொல்லப்படும் மிருகங்கள்) மாறி மாறி "கொலோனெட்டுகளின் கொத்துகள்" கொண்ட தூண்களால் உச்சவரம்பு ஆதரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மைய நெடுவரிசைகளிலும் காணப்படுகிறது. இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழா வைகுந்த ஏகாதசி ஆகும். இத்திருவிழாவிற்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இந்த கோயில் புதையல் வேட்டைக்கான அமைப்பை ரிடில் ஆஃப் தி செவன்த் ஸ்டோன் என்ற புத்தகத்தில் வழங்கியது [3]

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. S, Bageshree (9 September 2010). "Forgotten, but still holding fort". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-neighbourhood/article622017.ece. பார்த்த நாள்: 28 January 2011. 
  2. Michell (1995), p. 71
  3. Madhukar, Jayanthi (18 October 2010). "Into B’lore’s underbelly". Bangalore Mirror இம் மூலத்தில் இருந்து 7 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111007050141/http://www.bangaloremirror.com/article/31/201010182010101817262121233940e5f/Into-B%E2%80%99lore%E2%80%99s-underbelly.html. பார்த்த நாள்: 29 May 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]