உள்ளடக்கத்துக்குச் செல்

கெம்தி அருவி

ஆள்கூறுகள்: 30°29′14.34″N 78°2′10.34″E / 30.4873167°N 78.0362056°E / 30.4873167; 78.0362056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெம்தி அருவி (Kempty Falls) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள தெக்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள இராம் காவ்ன் மற்றும் கெம்தியின் தெற்கில் உள்ள ஒரு அருவி ஆகும். முசோரியிலிருந்து 13 கிலோமீட்டர்கள் (8 mi) சக்ரதா சாலையில், தேராதூனிலிருந்து 45 கிலோமீட்டர்கள் (28 mi) தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1364 மீட்டர் உயரத்தில் 78°-02'கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 30° -29'வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. கெம்தி அருவி மற்றும் சுற்றியுள்ள பகுதி 4500 அடி உயரத்தில் உயர்ந்த மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த அருவியினை காண ஆண்டிற்கு 10 லட்சம் (ஒரு மில்லியன்) சுற்றுலாப் பயணிகளின் வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கெம்தி அருவி 1835ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய அதிகாரி ஜான் மெகினனால் ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டது. கெம்ப்டி என்ற பெயர் 'கேம்ப்-டீ' என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். பங்களாவ் கி கண்டி கிராமத்தின் தென்மேற்கு தொடங்கி, ஆண்டு முழுவதும் ஓடும் நீரோடை ஒன்று வடமேற்கே நகர்ந்து 4,500அடி உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. இது ஐந்து அடுக்குகளாகப் பிரிந்து, மேலும் 40 அடி கீழே விழுகிறது.[1][2]

இதன் அருகிலுள்ள மருத்துவ மையங்கள் தேராதூன், முசோரி மற்றும் கெம்ப்டி ஆகும். தேராதூன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். அருகிலுள்ள வானூர்தி நிலையம் தேராதூனில் உள்ள ஜாலி கிராண்ட் வானூர்தி நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெம்தி_அருவி&oldid=3820030" இலிருந்து மீள்விக்கப்பட்டது