குழந்தை இயேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய் மரியாவேடு குழந்தை இயேசு
நற்செய்திகளின்படி
இயேசுவின் வாழ்வு
இயேசுவின் வாழ்வு

Portal icon கிறித்தவம் வலைவாசல்

Portal icon விவிலியம் வலைவாசல்

குழந்தை இயேசு என்பது இயேசுவின் பிறப்பு முதல் அகவை 12 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இயேசுவின் காலத்தில் யூத வழக்கத்தின்படியும், கிறிஸ்தவ கலாச்சாரத்தின் சில அண்மித்த நூற்றாண்டுகள் வரையும் 13 அகவையின் பின் ஒருவர் வளர்ந்தவராக கருதப்பட்டார்.

இயேசுவின் குழந்தை பருவ நற்செய்திகள் (Infancy Gospels) என்னும் பெயரில் பல நூல்கள் இப்பருவத்தில் இயேசுவின் வாழ்வை சித்தரிப்பதாக கூறுகின்றன.

3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டிலிருந்து இயேசுவின் குழந்தை பருவம் கலையில் சித்தரிக்கப்படலாயிற்று. இதில் குறிப்பாக அவரின் பிறப்பு சித்தரிப்பு அடங்கும். இயேசுவின் தாய் மரியாவை சித்தரிக்கும் போது இயேசுவை குழந்தையாக அவை கையில் ஏந்தியவாறு சித்தரிப்பது வழக்கம். இச்சித்தரிப்புகளில் இயேசுவின் விருத்த சேதனம், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல், ஞானிகள் வருகை, எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் ஆகியனவும் பொதுவாக சித்தரிக்கப்படுவது வழக்கம்.[1] Scenes showing his developing years are rarer (these years are hardly mentioned in the நற்செய்திகள்s).

லியொனார்டோ டா வின்சி போன்ற வல்லுனர்களின் படைப்புகளின் திருக்குடும்பம் மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் குழந்தை யேசுவை சித்தரிப்பது வழக்கமானதொன்றாக இருந்தது.[2]

திருமுறை நற்செய்திகளில் இப்பருவத்தினைப்பற்றி மிகக் குறைவாகவே உள்ளது. இயேசுவின் பிறப்பிலிருந்து 12ஆம் அகவையில் கோவிலில் சிறுவன் இயேசு அறிஞரோடு விவாதிப்பது வரை எத்தகவலும் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Signs & symbols in Christian art, George Ferguson, 1966, Oxford University Press US, p.76
  2. Holy Family. (2010). In Encyclopædia Britannica. Retrieved February 05, 2010, from Encyclopædia Britannica Online: http://www.britannica.com/EBchecked/topic/269769/Holy-Family

மேலும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை_இயேசு&oldid=1556549" இருந்து மீள்விக்கப்பட்டது