குல்சம் பேகம் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்சம் பேகம் பள்ளிவாசல்

சுமார் 1940களில் குலாம் யாஸ்தானி என்பவரால் எடுக்கப்பட்ட பள்ளிவாசலின் புகைப்படம்.

அமைவிடம் ஐதராபாத்து, இந்தியா
கட்டிடக்கலைத் தகவல்கள்
கொள்ளளவு {{{கொள்ளளவு}}}
நீளம் {{{நீளம்}}}
மினாரா(க்கள்) 2
கட்டடப் பொருட்கள் கருங்கல், சுண்ணாம்பு, செங்கல்

குல்சம் பேகம் பள்ளிவாசல் (Kulsum Begum Masjid) (குல்சம்புரம் பள்ளிவாசல் அல்லது ஜமா மஸ்ஜித் கார்வான் என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் கார்வான் வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 17ஆம் நூற்றாண்டில் சுல்தான் முகம்மது குதுப் ஷாவின் மகள் குல்சம் பேகம் என்பவரால் கட்டப்பட்டது. [1] [2] [3] பள்ளிவாசல் அமைப்பின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, திருமணத்தின் போது குல்சம் பேகம் அவரது கணவரிடமிருந்து திருமணத்தின்போது பெறப்பட்ட பரிசுத் தொகையைக் கொண்டு இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது.

கட்டிடக்கலை[தொகு]

இந்தக் கட்டிடக்கலை நகரத்தின் பிற குதுப் ஷாஹி பள்ளிவாசல்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மூன்று அடி உயரமுள்ள ஒரு அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட இதன் முகப்பில் மூன்று வளைவுத் திறப்புகள் உள்ளன. முகப்பிலிருக்கும் இரண்டு மினார்களின் வெளிப்புறச் சுவர்கள் பெரிதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இரண்டு சிறிய வளைந்த மாடங்கள் சுவரை ஒட்டி நிற்கின்றன.

பள்ளிவாசல் நிர்மாணித்த தேதி குறித்த எந்த கல்வெட்டும் இல்லை. [4]

மேற்கோள்கள்[தொகு]