குலுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலுமை விளைந்த நெல்மணிகளை கொட்டி வைக்க வீடுகள் தோறும் தானிய சேமிப்பு கிடங்கு(குலுமை) இருப்பது வழக்கம். தானிய குலுமையின் எண்ணிக்கை, உயரத்தை வைத்து விவசாயி நெல், தானியச் செல்வங்களை மதிப்பிடலாம். சாதாரணமாக மூன்றில் இருந்து 10 அடுக்கு வரை தானிய சேமிப்பு குலுமை இருக்கும். மண்ணால் தயாரிக்கப்பட்ட இவை கிணறு உறைபோன்று வட்டமாக இருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, தானியங்களை சேமித்து வைப்பர். குலுமையின் மேல் பகுதியில் நெல்லை கொட்டுவர். கீழ் துவாரத்தில் தேவைக்கேற்ப நெல்லை எடுக்கலாம். இக்குலுமைகள் நீண்ட காலம் இருக்க சாணத்தால் குலுமையில் பூசி பராமரித்து வருவர். இதன் காரணமாக குலுமைக்குள் பூச்சி, வண்டு நெருங்காது. முப்போகம் விளைந்த நெல் மணிகள் குலுமைகளில் நிறைந்திருக்கும். வீட்டு தேவை, விற்பனைக்கும், விதைப்பிற்கென தேவைக்கேற்ப நெல் மணிகளை தனி குலுமைகளில் வைத்திருப்பர்.

குறையும் குலுமை[தொகு]

நாளடைவில் விவசாயம் குறைந்து வருவதால், இதன் பயன்பாடும் குறைந்து வருகிறது. உரிய பராமரிப்பும் இல்லாததால் குலுமைகள் சேதமடைந்து, விவசாயிகள் வீடுகளில் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன.

மேற்கோள்கள்[1][2][தொகு]

  1. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=499391&cat=504[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://webcache.googleusercontent.com/search?q=cache:lkiutG43n8cJ:www.dinamalar.com/news_detail.asp%3Fid%3D337088%26Print%3D1+&cd=12&hl=en&ct=clnk&gl=in
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலுமை&oldid=3726164" இலிருந்து மீள்விக்கப்பட்டது