குரோவாசியாவில் சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரோவாசியாவில் சமயமின்மை என்பது இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை, lமதச் சார்பின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 4.57% குரோவாசியர்கள் மட்டுமே தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கருதுவதாகக் காட்டினாலும், 2007 மற்றும் 2008 இல் நடத்தப்பட்ட கலுப் கருத்துக்கணிப்புகளில் பதிலளித்தவர்களில் 30.5% வீதமானோர் மதத்தை அவர்களின் வாழ்க்கையில் முக்கியமாகக் கருதவில்லை எனக் குறிப்பிட்டனர். 2010 இல் ஐரோப்பா முழுவதும் யூரோபரோமீட்டர் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 7% உடன் ஒப்பிடும்போது, யப்பானிய ஆராய்ச்சி மையமான டென்சு 2006 இல் நடத்திய கணக்கெடுப்பின்படி 13.2% குரோவாசியர்கள் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அறிவித்தனர்.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. "図録▽世界各国の宗教". .ttcn.ne.jp. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  2. "Biotechnology Report" (PDF). Archived (PDF) from the original on 2010-12-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.