குருந்தவாட்

ஆள்கூறுகள்: 16°41′30″N 74°35′31″E / 16.691612°N 74.591821°E / 16.691612; 74.591821
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருந்தவாட்
நகரம்
குருந்தவாட் is located in மகாராட்டிரம்
குருந்தவாட்
குருந்தவாட்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் குருந்தவாட் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°41′30″N 74°35′31″E / 16.691612°N 74.591821°E / 16.691612; 74.591821
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்கோலாப்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்22,372
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இளைய குருந்தவாட் சமஸ்தானத்தின் கொடி

குருந்தவாட் (Kurundwad), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பஞ்சகங்கா ஆறும், கிருஷ்ணா ஆறும் சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் மாவட்டத் தலைமையிட நகரமான கோலாப்பூருக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

1772 முதல் 1948 முடிய குருந்தவாட் நகரம், 114 சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்த இளைய குருந்தவாட் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது..[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 4,572 குடும்பங்கள் கொண்ட குருந்தவாட் நகரத்தின் மக்கள் தொகை 22,372 ஆகும். அதில் ஆண்கள் 11,325 மற்றும் 11,047 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 86.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,991 மற்றும் 104 ஆகவுள்ளனர்.

மராத்திய மொழி பேசும் குருந்தவாட் நகரத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 14,213 (63.53%), இசுலாமியர் 5,409 (24.18%), பௌத்தர்கள் 342 (1.53%), சமணர்கள் 2,254 (10.08%), மற்றும் பிறர் 0. 76% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kurundwad Junior (Princely State)". Archived from the original on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
  2. Kurundvad Population, Religion, Caste, Working Data Kolhapur, Maharashtra - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருந்தவாட்&oldid=3505506" இலிருந்து மீள்விக்கப்பட்டது