குட்டி இந்தியா, ஒக் மர சாலை, நியூ ஜெர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டி இந்தியா (Little India) என்பது அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாநிலம், மிடில்செக்ஸ் கவுண்டி, ஓக் ட்ரீ சாலையை (கவுண்டி வழித்தடம் 604) மையமாகக் கொண்டு ஐசெலின் மற்றும் எடிசன் நகரியப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு தெற்காசிய பாரம்பரிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த வண்ணமயமான வணிக மாவட்டமாகும். [1] [2]

அமைவிடம்[தொகு]

ஓக் ட்ரீ சாலை எடிசன் மற்றும் ஐசெலின் நகரியப்பகுதிகள் வழியாக சுமார் நான்கு மைல்கள் வரை செல்கிறது. [3][4]வூட் அவென்யூ (Wood Avenue) மற்றும் ஓக் ட்ரீ சாலை சந்திப்பில் (Intersection) எடிசன் மற்றும் ஐசெலின் ஆகிய இரண்டு நகரியங்களும் இணைகின்றன. ஓக் ட்ரீ சாலையில், கொரேஜா அவென்யூ (Correja Avenue) மற்றும் மிடில்செக்ஸ் அவென்யூக்களுக்கு (Middlesex Avenue) இடைப்பட்ட பகுதி இந்திய சதுக்கம் (India Square) என்று அழைக்கப்படுகிறது. [5] இது குட்டி இந்தியாவின் புகழ்பெற்ற சில்லரை விற்பனை மையமாகத் திகழ்கிறது. 2017 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வாடகை இரு மடங்கு ஆனதாக ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. [6]இதன் புவியமைவிடம் 40° 24' 16.164 N அட்சரேகை 74° 31' 4.656 W தீர்க்க ரேகை ஆகும்.

குட்டி இந்தியா[தொகு]

சரவணபவன் உணவகம்
சரவணபவன் உணவகம்

இங்கு 400க்கும் மேற்பட்ட தெற்காசிய சில்லறை வணிக நிறுவனங்கள் உள்ளன. வர்ஜீனியா, மைனே ஆகிய மாநிலங்களிலிருந்தும் இந்தியர்கள் ஓக் ட்ரீ சாலையில் நகைகள், ஆடைகள், மளிகை சாமான்கள், மின் சாதனங்கள், பூசைப் பொருட்கள், இனிப்பகங்கள், காய்கறிகள், மலர்கள் போன்றவற்றை வாங்குவதற்கு வருவதுண்டு. [1] இங்குள்ள 145க்கும் மேற்பட்ட வட இந்திய, தென்னிந்திய, பஞ்சாபி, குஜராத்தி, செட்டிநாடு, மதுரை உணவு வகைகளுக்குப் பெயர்பெற்ற இந்திய உணவகங்களில் உணவருந்துவதற்கு பல மைல் தொலைவுகளிலிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். [7][8] பல அமெரிக்கர்களும் விடுமுறை நாட்களில் வந்து உணவருந்துகிறார்கள். [1] குஜராத்தி மற்றும் மகாராட்டிர நகைக்கடைகளில் இந்திய பாரம்பரிய தங்க நகைகளை வாங்குவதற்காகவும் இங்குள்ள அழகு நிலையங்களுக்குச் செல்வதற்காகவும் பெண்கள் வருகிறார்கள். தீபாவளி, ஹோலி, விநாயக சதுர்த்தி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் இந்தியர்கள் கூட்டம் அதிகரிப்பதுண்டு. [1] இந்த சாலையில் உள்ள கடைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை நாள் என்பதால் இங்கு மக்கள் வருகை குறைவாகவே காணப்படும். [9][10][11][12]

வரலாறு[தொகு]

சாலையின் இரு மருங்கிலும் ஓக் (தாவரப்பெயர்: குவெர்கஸ் ரோபர் (Quercus robur) (தாவரக் குடும்பம் ஃபேகேசி (Fagaceae) மரங்கள் நிறைந்திருந்தால் இது ஓக் மர சாலை என்று பெயர் பெற்றது. [13] [14] பூர்வீக அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயக் குடியேறிகளுக்குமிடையே ஜூன் 26, 1777 தேதி எடிசன் பகுதிகளில் ஷார்ட் ஹில்ஸ் போர் (Battle Short Hills) நடைபெற்றது. [13][15] இந்த அமெரிக்கப்புரட்சி போர் காலங்களில் இங்கு ஒரு சந்தை இருந்துள்ளது. 1990 ஆம் ஆண்டுகளில் இந்தியச் சந்தை உருவாகியுள்ளது. நாளடைவில் இப்பகுதி செழிப்பான இந்திய சில்லறை வர்த்தக மையமாக உருவெடுத்துள்ளது. [16]

வளர்ச்சி[தொகு]

இங்கு அமைந்துள்ள மெட்ரோபார்க் இரயில் நிலையம், மன்ஹாட்டனில் உள்ள பென் இரயில் நிலையத்துடன் இணைப்பதால், இரயில் பயணிகளும் இப்பகுதிக்கு வந்து பொருட்களை வாங்குகிறார்கள். [17] எடிசன் மற்றும் ஐசெலின் நகரியங்களில் சாய் பாபா கோவில், சுவாமி நாராயண் கோவில், அரே கிருஷ்ணா (இஸ்கான்) கோவில், துவாரகதீசு கோவில், வேத மந்திர், போன்ற பல இந்திய கோவில்கள் அமைந்துள்ளன. [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Little India on Oak Tree Rd Edison/Iselin Oak Tree Road.us
  2. Oak Tree Road is a Street of Dreams for Lovers of South Asian Cuisine By Pooja Makhijani. New Jersey monthly. May 1, 2017
  3. In Edison, a Crossroads of Diversity Robert Hanley. The New York, April 17, 1991
  4. Indo-Chinese Food Is Hard to Find, Except in New Jersey The New York Times. 9 March 2017
  5. Day Trip: Edison and Iselin, New Jersey for South Asian flavors பரணிடப்பட்டது 2022-09-27 at the வந்தவழி இயந்திரம் Brooklyn Based January 26, 2012
  6. Little India Thrives in Central New Jersey Dow Jones September 25, 2017
  7. Oak Tree Road is a Street of Dreams for Lovers of South Asian Cuisine New Jersey Monthly 1 May 2017
  8. The Best Indian Food In New York Is Actually in New Jersey Robert Sietsema Eater NY 13 March 2017
  9. Oak Tree Road Edison, Iselin NJ Indian Shopping, Food, Restaurants
  10. A One-Day Snacker's Guide to Edison, NJ, One of America's Best Indian Food Destinations SAVEUR March 18, 2019
  11. A Place Where Indians, Now New Jerseyans, Thrive Joseph Berger The New York Times. 27 April 2008
  12. Edison Brimming with Indian Culture - Video
  13. 13.0 13.1 The Oak Tree Neighborhood Historical Marker www.hmdb.org
  14. "Historians shed light on site of 1777 battle | em.gmnews.com | Edison/Metuchen Sentine". Archived from the original on 2015-09-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.
  15. Edison, New Jersey Revolutionary War Sites | Edison Historic Sites
  16. How Indo-Americans Created The Ultimate Neighborhood Bank Monte Burke Forbes
  17. Metropark Station NJ Transit
  18. Iselin Hindu Temples NRI World