குடியுரிமை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடியுரிமையைக் குறித்து இந்திய அரசியலமைப்பின் பகுதி 2-இல் சட்டப் பிரிவு 5 முதல் 11 வரை விளக்கப்பட்டுள்ளது.[1][2] இந்தியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றியே இந்திய அரசியலமைப்பில் ஒற்றைக் குடியுரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில் இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஆகியவைகளை 2019-இல் இந்திய நாடாளுமன்றம் 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் நீக்கிய பின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கும் ஒற்றைக் குடியுரிமையே நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியக் குடியுரிமை தொடர்பாக இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் தேசியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2003 மற்றும் 2019 இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. C Citizenship in India
  2. "Citizenship (Article 5-11)". Archived from the original on 2020-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியுரிமை_(இந்தியா)&oldid=3550352" இலிருந்து மீள்விக்கப்பட்டது