கிறிஸ்டல் மேக்மில்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டல் மேக்மில்லன்
Monochrome photograph portrait of a woman in her twenties, shown from the bust upward, the woman wearing a vertical-patterned blouse decorated by a row of buttons between the shoulders and the closed collar, her face directly forward gazing at the viewer, her cheeks prominent and fleshy, the mouth slightly opened in a tight smile, the coarse, sun-bleached sandy-coloured hair parted in the middle, extending to the ears in an overall loose wave with flyaway strands
பிறப்புஜெஸ்ஸி கிறிஸ்டல் மேக்மில்லன்
(1872-06-13)13 சூன் 1872
எடின்பரோ, இசுக்கொட்லாந்து
இறப்பு21 செப்டம்பர் 1937(1937-09-21) (அகவை 65)
எடின்பரோ, இசுக்கொட்லாந்து
கல்லறைகோர்ஸ்டர்பைன், எடின்பரோ
கல்விகணிதம், இயற்கைத் தத்துவம், தார்மீக தத்துவம், தர்க்கம்
படித்த கல்வி நிறுவனங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர்

ஜெஸ்ஸி கிறிஸ்டல் மேக்மில்லன் ( Jessie Chrystal Macmillan ) (13 ஜூன் 1872 - 21 செப்டம்பர் 1937) ஒரு வாக்குரிமையாளரும், அமைதி ஆர்வலரும், வழக்கறிஞரும், பெண்ணியவாதியும் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் அறிவியல் பட்டதாரியுமாவார். மேலும், பல்கலைகழகத்தின் கணிதத்தில் முதல் பெண் கௌரவ பட்டதாரியும் ஆவார். இவர் பெண்கள் வாக்குரிமைக்காகவும், மற்ற பெண்களின் பிரச்சனைகளுக்காகவும் செயல்பட்டவர். பிரபுக்கள் அவை முன் வழக்கு தொடர்ந்த இரண்டாவது பெண்மணி இவர், அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராவார்.

ஆரம்ப கால வாழ்க்கையில்[தொகு]

ஜெஸ்ஸி கிறிஸ்டல் மேக்மில்லன் 1872 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி ஜெஸ்ஸி கிறிஸ்டல் (என்கிற) பின்லேசன் மற்றும் ஜான் மேக்மில்லனுக்கு மகளாகப் பிறந்தார்.[1] குடும்பம் எடின்பரோவின் நியூ டவுனில் வசித்து வந்தது.[2]

பணிகள்[தொகு]

முதலாம் உலகப் போரின் முதல் ஆண்டில், மேக்மில்லன் ஐக்கிய இராச்சியத்தின் அமைதியை நாடும் பெண்களுக்காக டென் ஹாக்கில் கூடிய சர்வதேச மகளிர் மாநாட்டில் பேசினார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு தங்களின் செய்தியை எடுத்துச் செல்ல ஐந்து பிரதிநிதிகளை மாநாடு தேர்ந்தெடுத்தது. இவர் அமெரிக்காவின் பிற பிரதிநிதிகளை சந்திப்பதற்கு முன்பு வடக்கு ஐரோப்பா மற்றும் உருசியாவின் நடுநிலை மாநிலங்களுக்குச் சென்றார். இவர் ஊட்ரோ வில்சன் போன்ற நடுநிலையான நாடுகளின் உலகத் தலைவர்களைச் சந்தித்தார். ஹாக்கில் வடிவமைக்கப்பட்ட திட்டங்களை முன்வைக்க. வில்சன் இந்த முன்மொழிவுகளை தனது பதினான்கு திட்டங்களில் பயன்படுத்தினார். போரின் முடிவில், சூரிக்கில் இரண்டாவது பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்ய மேக்மில்லன் உதவினார். மேலும் வெர்சாய் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக பாரிஸில் நடந்த அரசியல் தலைவர்கள் கூட்டத்திற்கு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். உலக நாடுகள் சங்கம் நிறுவப்படுவதை ஆதரித்தார். மேக்மில்லன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

1935 பொதுத் தேர்தலில், எடின்பர்க் நார்த் தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மேக்மில்லன் தோல்வியுற்றார். அதே காலகட்டத்தில், பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க இவர் பணியாற்றினார்.[3][4]

இறப்பு[தொகு]

1937 ஆம் ஆண்டில், மேக்மில்லனின் உடல்நிலை மோசமாகி, அதே ஆண்டு செப்டம்பர் 21 அன்று அவர் இதய நோயால் இறந்தார். நகரின் மேற்கில் உள்ள கார்ஸ்டோர்பின் தேவாலயத்தில் தனது பெற்றோருடன் இவரது எச்சங்கள் அடக்கம் செய்யப்பட்டன. தேவாலயத்திற்கு வடக்கே கருங்கல்லாலான சிலுவையால் கல்லறை அடையாளாபடுத்தப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Macmillan, Chrystal, (1923–21 Sept. 1937), barrister", Who Was Who (in ஆங்கிலம்), Oxford University Press, 2007-12-01, doi:10.1093/ww/9780199540884.013.u213397, ISBN 978-0-19-954089-1, பார்க்கப்பட்ட நாள் 2019-04-22
  2. Edinburgh and Leith Post Office Directory 1872-73
  3. Rappaport, 2001, pp. 413–414.
  4. O'Connor, J. J.; E. F. Robertson (January 2008). "Jessie Chrystal MacMillan". MacTutor History of Mathematics. University of St Andrews Scotland, School of Mathematics and Statistics. பார்க்கப்பட்ட நாள் 6 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டல்_மேக்மில்லன்&oldid=3858689" இலிருந்து மீள்விக்கப்பட்டது