கிமெலின் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிமெலின் சோதனை (Gmelin's test) என்பது சிறுநீரில் பித்த நிறமிகள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு வேதிப் பரிசோதனை ஆகும். சோதனையை அறிமுகப்படுத்திய லியோபோல்ட் கிமெலின் பெயரால் இது பெயரிடப்பட்டது.[1][2][3] ஒரு சோதனைக் குழாயில் ஐந்து மில்லிலிட்டர் செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்துடன் ஐந்து மில்லிலிட்டர் சிறுநீர் மெதுவாக சேர்க்கப்படுகிறது. பித்த நிறமிகள் பல்வேறு வேதிப் பொருட்களுக்கு ஆக்சிஜனேற்றம் செய்யப்படுவதால், இரண்டு அடுக்குகளுக்கு இடையில் வெவ்வேறு வண்ண வளையங்கள் தெரியும்.[4][5] நைட்ரிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] பிலிருபின் இருந்தால் நீலம், பச்சை மற்றும் கரு ஊதா வளையங்கள் காணப்படும்.[7] இச்சோதனை மிகவும் உணர்திறன் கொண்டதல்ல. எனவே, நேர்மறையான முடிவு எப்போதும் பித்த நிறமிகள் இருப்பதைக் குறிக்கிறது. ஆனால், எதிர்மறையான முடிவு சிறிய அளவிலான பித்த நிறமிகள் இருப்பதை விலக்குவதில்லை.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Erwin Kuntz; Hans-Dieter Kuntz (11 March 2009). Hepatology: Textbook and Atlas. Springer. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-76839-5.
  2. John Daintith; Derek Gjertsen (4 March 1999). A Dictionary of Scientists. Oxford University Press. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280086-2.
  3. John Daintith (12 December 2010). Biographical Encyclopedia of Scientists, Third Edition. CRC Press. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-7272-3.
  4. Srinivas B Rao. Practical Biochemistry for Medical Students. Academic Publishers. p. 56.
  5. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.
  6. D M Vasudevan (2013). Textbook of Biochemistry for Medical Students. JP Medical Ltd. p. 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5090-530-2.
  7. Malhotra (1 January 2003). Practical Biochemistry for Students. Jaypee Brothers Publishers. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-109-4.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. A.C. Croftan. Clinical Urinology. Рипол Классик. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-275-01265-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமெலின்_சோதனை&oldid=3663317" இலிருந்து மீள்விக்கப்பட்டது