கித்தி ஈசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கித்தி ஈசுவரி (Giddi Eswari) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தற்போது இவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார். பதேரு தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இவர் ஓர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஈசுவரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறீ அப்பாலா நாயுடுவின் மகள் ஆவார்[1].

ஈசுவரி முதன் முதலில் ஓய். எசு. ஆர் . காங்கிரசு கட்சியில் ஓர் உறுப்பினராக இருந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்தி_ஈசுவரி&oldid=2937988" இலிருந்து மீள்விக்கப்பட்டது