கா. சு. சபரிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா. சு. சபரிநாதன்
കെ.എസ്. ശബരീനാഥൻ
கேரள சட்டமன்றத்தில் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
1 சூலை 2015 (2015-07-01) – 23 மே 2021 (2021-05-23)
முன்னையவர்ஜி. கார்த்திகேயன்
பின்னவர்ஜி. இசுடீவன்
தொகுதிஅருவிக்கரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1983-09-05)5 செப்டம்பர் 1983
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
பிள்ளைகள்1[1]
பெற்றோர்(கள்)
கல்வி
வேலைஅரசியல்வாதி

கா. சு. சபரிநாதன் (K. S. Sabarinadhan) (பிறப்பு 5 செப்டம்பர் 1983) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2015 முதல் 2021 வரை கேரள சட்டமன்றத்தில் அருவிக்கரை சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சபரிநாதன் முன்னாள் அமைச்சரும் பேரவைத் தலைவருமான ஜி. கார்த்திகேயன் - மருத்துவர் எம். டி. சுலேகா தம்பதிக்கு 5 செப்டம்பர் 1983இல் பிறந்தார்.

இவர் 2005இல் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு பெங்களூரிலுள்ள மைன்றீயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.[2] 2008இல் குருகிராமின் மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மையை முடித்தார். அதன்பிறகு, மும்பையிலுள்ள டாட்டா குழுமத்தில் பல வருடங்கள் பணியாற்றினார். இறுதியில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையுடன் சில வருடங்கள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பகுதிகளில் பணியாற்றினார்.[3]

குடும்பம்[தொகு]

தனது மனைவி திவ்யா எஸ். ஐயருடன் சபரிநாதன்

சபரிநாதன் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திவ்யா எஸ். ஐயர் என்பவரை மணந்தார். [4] இதன் மூலம் கேரளாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் -இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இணை என ஆனார்.[5] இவர்களுக்கு 9 மார்ச் 2019 இல் மல்ஹர் என்ற மகன் பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2015 இல், சபரிநாதன் தனது தந்தையின் மரணத்தால் காலியாக இருந்த அருவிக்கரை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இவர் தன்னுடன் போட்டியிட்ட எம். விஜயகுமார் என்பவரை 10,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] [7][8]

2016 கேரள சட்டமன்றத் தேர்தலில், இவர் அருவிக்கரை தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) வேட்பாளர் ஏ. ஏ. இரசீத்தை 21,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[9] 2020இல், கேரள இளைஞர் காங்கிரசின் துணைத் தலைவரானார்.[10] 2021 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) ஜி. இசுடீவனிடம் 5046 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sabari-Divya's baby boy named after a raga". Onmanorama. https://www.onmanorama.com/kerala/top-news/2019/04/25/sabarinadhan-divya-s-iyer-baby-boy-name.html. 
  2. "പണ്ടേ 'തള്ളാൻ' മിടുക്കൻ, കൊതിച്ച ജോലി കിട്ടി; പക്ഷേ കാലം കാത്തുവെച്ചത് മറ്റൊരു നിയോഗം". www.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
  3. http://www.niyamasabha.org/codes/members.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-06.
  5. http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/congress-mla-ks-sabarinadhan-marries-kerala-ias-officer/articleshow/59381651.cms
  6. "Aruvikkara By-Election Results LIVE: KS Sabarinathan Wins with Margin of 10128 Votes; UDF Wave in All Panchayats". International Business Times. http://www.ibtimes.co.in/aruvikkara-by-election-results-live-polling-begins-heavy-security-sri-swathithirunal-college-637520. 
  7. "Aruvikkara by-polls: Sabarinathan wins by 10128 votes". கேரளகௌமுதி இம் மூலத்தில் இருந்து 2015-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150712132030/http://www.kaumudi.com/innerpage1.php?newsid=66352. 
  8. "Kerala assembly bypoll: Congress candidate KA Sabarinathan wins Aruvikara seat". Firstpost. http://www.firstpost.com/politics/kerala-assembly-bypoll-congress-candidate-k-a-sabarinathan-wins-aruvikara-seat-2319012.html. 
  9. https://www.hindustantimes.com/elections/kerala-assembly-election/aruvikkara-1094311878
  10. https://www.newindianexpress.com/states/kerala/2020/mar/09/kerala-mla-shafi-parambil-is-new-youth-congress-president-2114194.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._சு._சபரிநாதன்&oldid=3548764" இலிருந்து மீள்விக்கப்பட்டது