காவற்பெண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 86 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

  • துறை - ஏறாண்முல்லை

ஆண்சிங்கம் போலப் போராடும் ஆண்மகனின் சிறப்பினைக் கூறுவது ஏறாண்முல்லை.

பாடல் [தொகு]

'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

பாடல் சொல்லும் செய்தி [தொகு]

போருக்கு அரசன் அழைப்பு வந்துள்ளது. காவற்பெண்டு குடிசை வீட்டில் வாழ்ந்துவந்தாள். ஒருவன் அவள் வீட்டுக்கு வந்து அவளது வீட்டுத் தூணைப் பற்றி நின்றுகொண்டு உன் மகன் எங்கே என்று காவற்பெண்டைக் கேட்டான். அப்போது அவள் சொல்கிறாள்.

என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற வயிறு இதோ இங்கு இருக்கிறது. (இது மறக்குடி மகனைப் பெற்றெடுத்த வயிறு) அவன் கட்டாயம் போர்களத்துக்குத் தானே வந்து நிற்பான். (நீ செல்)

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
அள்ளூர் நன்முல்லையார் | ஆதி மந்தியார் | ஒக்கூர் மாசாத்தியார் | ஓரம்போகியார் | ஔவையார் | கச்சிப்பேட்டு நாகையார் | கழார்க் கீரன் எயிற்றியார் | காக்கை பாடினியார் நச்செள்ளையார் | காவற்பெண்டு | காமக்கணி பசலையார் | குறமகள் இளவெயினியார் | குறமகள் குறிஎயினியார் | குமிழி ஞாழலார் நப்பசலையார் | நக்கண்ணையார் | நன்னாகையார் | நெடும்பல்லியத்தை | பக்குடுக்கை நன்கணியார் | பூங்கண் உத்திரையார் | பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு | பேரெயில் முறுவலார் | பேயார் | பேய்மகள் இளவெயினியார் | பொதும்பில் புல்லாளங் கண்ணியார் | பொன்முடியார் | மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் | மாரிப்பித்தியார் | மாறலோகத்து நப்பசலையார் | முள்ளியூர்ப் பூதியார் | வருமுலையாரித்தி | வெறியாடிய காமக் கண்ணியார் | வெள்ளி வீதியார் | வெண்ணிக் குயத்தியார் | வெண்மணிப் பூதியார்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=காவற்பெண்டு&oldid=701093" இருந்து மீள்விக்கப்பட்டது