மாற்பித்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாற்பித்தியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் 2 பாடல்கள் உள்ளன. அவை புறநானூறு 251, புறநானூறு 252

இரண்டும் தாபதவாகை என்னும் துறையைச் சேர்ந்தவை. 'நாலிரு வழக்கின் தாபத பக்கம்' என்று தொல்காப்பியம் (1021) இதனைக் குறிப்பிடுகிறது. தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை. தவம் செய்வோரின் பணி எட்டு வகையில் அமைந்திருக்கும் என்பது தொல்காப்பியர் வகைப்பாடு.

  • பித்தன் என்பது ஆண்பால். பித்தி என்பது பெண்பால். பித்தியார் பெண்பாற் புலவர்.
  • மாயம் செய்பவன் மால். திருமால். இப்புலவர் வாழ்க்கையை மாயம் என்று காட்டுவதால் மால் என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றுள்ளார்.

தாபத வாழ்க்கை [தொகு]

  • மலையில் மூங்கில் போல் ஒழுகும் அருவியில் நீராடுவர்.
  • வெளிச்சத்துக்காகக் காட்டு யானை ஒடித்துப் பொட்டுக் காய்ந்த விரகில் தீ மூட்டுவர்.
  • பின்புறம் தொங்கும் புரிசடையாடு வாழ்வர்.
  • அவர்களது சடை தில்லைக் காய்க் கொத்துப் போல் இருக்கும்.
  • தாளி என்னும் இலையைக் கொய்து படையல் செய்து உணவாக்கிக் கொள்வர்.

மால் (மாய) வாழ்க்கை [தொகு]

  • இன்று தவம் செய்பவன் ஒரு காலத்தில் 'இல் வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவனாய் இருந்தவன் - என்கிறார்.
  • இன்று புரிசடையைப் புலர்திக்கொண்டிருப்பவன் ஒரு காலத்தில் பாவை போன்ற மகளிரை ஏங்கவைத்து அவர்களின் வளையல்களை நழுவும்படி செய்தவன் - என்கிறார்.
சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
அள்ளூர் நன்முல்லையார் | ஆதி மந்தியார் | ஒக்கூர் மாசாத்தியார் | ஓரம்போகியார் | ஔவையார் | கச்சிப்பேட்டு நாகையார் | கழார்க் கீரன் எயிற்றியார் | காக்கை பாடினியார் நச்செள்ளையார் | காவற்பெண்டு | காமக்கணி பசலையார் | குறமகள் இளவெயினியார் | குறமகள் குறிஎயினியார் | குமிழி ஞாழலார் நப்பசலையார் | நக்கண்ணையார் | நன்னாகையார் | நெடும்பல்லியத்தை | பக்குடுக்கை நன்கணியார் | பூங்கண் உத்திரையார் | பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு | பேரெயில் முறுவலார் | பேயார் | பேய்மகள் இளவெயினியார் | பொதும்பில் புல்லாளங் கண்ணியார் | பொன்முடியார் | மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் | மாரிப்பித்தியார் | மாறலோகத்து நப்பசலையார் | முள்ளியூர்ப் பூதியார் | வருமுலையாரித்தி | வெறியாடிய காமக் கண்ணியார் | வெள்ளி வீதியார் | வெண்ணிக் குயத்தியார் | வெண்மணிப் பூதியார்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=மாற்பித்தியார்&oldid=703031" இருந்து மீள்விக்கப்பட்டது