கார்டசு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்டெசு தீவு
கார்டசு தீவு
ஜார்ஜியா ஜலசந்தியின் வடக்கு முனையில் அமைந்துள்ள கார்டெசு தீவு
புவியியல்
அமைவிடம்சைலிசு கடல்
ஆள்கூறுகள்50°07′N 124°58′W / 50.117°N 124.967°W / 50.117; -124.967
தீவுக்கூட்டம்டிஸ்கவரி தீவுகள்
பரப்பளவு130 km2 (50 sq mi)
நீளம்25 km (15.5 mi)
அகலம்13 km (8.1 mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை1,035

கார்டெசு தீவு ( Cortes Island ) என்பது கனடாவின் பிரித்தானிய கொலம்பியா கடற்கரையில் உள்ள டிஸ்கவரி தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு ஆகும். தீவு 25 கிமீ (16 மை) நீளமும், 13 கிமீ (8 மை) அகலமும், 130 கிமீ2 (50 சது மை) பரப்பளவும் கொண்டது. இது 1,035 நிரந்தர குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது (2016 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி). [1] கார்டெசு தீவு இசுட்ராத்கோனா பிராந்திய மாவட்டத்தின் தேர்தல் பகுதி 'பி' க்குள் உள்ளது. இங்கு நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், தீ பாதுகாப்பு, நில பயன்பாட்டு திட்டமிடல், பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் அவசரகால உதவி மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [2]

கார்டெசு தீவை விமானம் அல்லது படகு மூலம் அணுகலாம். தீவின் தெற்கு முனையில் உள்ள இலாப நோக்கற்ற தனியார் விமான ஓடுதளமான கார்டெசு தீவு வான்வெளி நிலையம் வழியாகவும் செல்லலாம் அல்லது தீவின் பல பாதுகாக்கப்பட்ட துறைமுகங்களுக்கு படகு மூலமாகவும் செல்லலாம். குவாட்ரா தீவிலிருந்து படகு மூலம், வான்கூவர் தீவில் உள்ள கேம்ப்பெல் ஆற்றில் இருந்து பிசி படகுகள் நிறுவனம் படகுகளை இயக்குகிறது.

தீவு கோடைக்காலத்தில் ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. அமைதியான சூழ்நிலையையும் வெப்பமான காலநிலையையும் அனுபவிக்க பலர் இத்தீவிற்கு வருகை தருகின்றனர்.

வரலாறு[தொகு]

1792 ஆம் ஆண்டில் எசுப்பானியாவைச் சேர்ந்த கடற்படை அதிகாரியும், வரைபடவியலாளரும் மற்றும் ஆய்வாளர்களுமான கலியானோ மற்றும் வால்டெசின் பயணத்தின் போது இத்தீவுக்கு மெக்சிக்கோவின் தேடல் வெற்றி வீரரான எர்னான் கோட்டெசின் நினைவாக தீவுக்கு பெயரிடப்பட்டது. [3] :46[4]

கார்டெசு தீவில் சூரிய உதயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Statistics Canada population figures
  2. "About Us". Strathcona Regional District. Archived from the original on 17 July 2013. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  3. Akrigg, G.P.V.; Akrigg, Helen B. (1969), 1001 British Columbia Place Names (3rd, 1973 ed.), Vancouver: Discovery Press
  4. BC Names entry "Cortes Island"

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டசு_தீவு&oldid=3903697" இலிருந்து மீள்விக்கப்பட்டது