காரம் காரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு காரீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:காரம், வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:காரீஸ்வரர்
தாயார்:காரிகாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி மற்றும் மகா அன்னாபிஷேகம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டவை பழமை மிகுந்த திருக்கோயில் மூலவர் காரீஸ்வரர் லிங்கமானது தலையில் ஒரு விண்ணம்பட்ட வட்ட வடிவிலான ஓட்டை உள்ளது மேலும் இந்த லிங்கமானது சுயம்புலிங்கமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு தொல்பொருள் துறையினரால் கொடுக்கப்பட்ட சான்று

காரம் காரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், காரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ காரிகாம்பிகை உடனுறை ஸ்ரீ காரிஸ்வரர் கற்றளி ஆலயம் கிபி 881  -  907  ஆம் ஆண்டு வரை சோழ நாட்டை ஆண்ட கோப்பரகசரி விசாலாய சோழன் மகன் முதலாம் ஆதித்ய சோழன் கட்டப்பட்டதாக தெரிகிறது இங்கு உள்ள லிங்கம் சுயம்புலிங்கம் என்றும் மற்றும் காராம்பசு பால் சுரந்ததாகவும் அதனால் இந்த கிராமத்திற்கு காரம் கிராமம் என்றும் அம்பாளுக்கு காரிகாம்பிகை என்றும் சுவாமிக்கு காரீஸ்வரர் என்றும் பெயர் சுட்ப்பட்டுள்ளது மேலும் இக்கோயிலுக்கு ராஜராஜ சோழன் மற்றும் பரதேசி ஆறுமுகம் போன்றோர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ததாக தெரிய வருகிறது

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி மற்றும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரம்_காரீஸ்வரர்_கோயில்&oldid=3956601" இலிருந்து மீள்விக்கப்பட்டது