காரக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரக்ஸ் (Κόραγος) என்பவர் மாசிடோனிய படையின் ஒரு புகழ்பெற்ற வீரர் மற்றும் பேரரசர் அலெக்சாந்தரின் தோழர். இவர் பங்கராசியம் என்னும் விளையாட்டில் சிறந்த வீரரான ஏதென்சின் டியோக்சிபசிடம் சண்டையிட்டு தோல்வி அடைந்ததற்காக நன்கு அறியப்படுகிறார்.

மாசிடோனிய பேரரசர் வைத்த விருந்தின் போது, காரகஸ் டியோக்சிபசிடம் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வருமாறு சவால் விட்டார் அதை அவர் ஏற்றுக்கொண்டார். காரக்ஸ் கையிலேவேல், ஈட்டி, சுத்தி, வாள் முதலிய ஆயுதங்களுடன், உடலில் வெண்களக் கவசம் அணிந்துக் கொண்டு சண்டையிட வந்தார். அதேசமயம் டியோக்சிபஸ் ஒரு கிளப் (கதை) ஆயுதத்தைமட்டும் கொண்டு சண்டைக்கு வந்தார். டியோக்சிபசால் இவரது ஈட்டி சிதறடிக்கபட்டதால், காரகஸ் தனது வாளைக் கொண்டு டியோக்சிபசை வீழ்த்த எத்தணித்தார். ஆனால் இவர் தனது கத்தியை உருவுவதற்கு முன்பே டியோக்சிபஸ் இந்த மாசிடோனிய வீரரைக் கவிழ்க்க தனது பங்கராசியம் நுட்பங்களைப் பயன்படுத்தி தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த இவரது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, அழுத்திக் கொண்டிருந்தார். இதன்பின்னர் காரக்ஸ் காப்பாற்றபட்டு விடுவிக்கபட்டார். மேலும் டியோக்சிபஸ் சண்டையின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், இது மாசிடோனியர்களிடையே ஏமாற்றத்தையும் ஏதெனியர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. )

டியோக்சிபசை தற்கொலை முடிவுக்கு தள்ளிய பிற்கால சதியில் காராக்கஸ் ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரக்ஸ்&oldid=3056833" இலிருந்து மீள்விக்கப்பட்டது