காஃபார்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஃபார்சைட்டு
Cafarsite
கருங்கல்லின் மீது காஃபார்சைட்டு
பொதுவானாவை
வகைஆர்சனைட்டுகள்
வேதி வாய்பாடுCa8(Ti,Fe2+,Fe3+,Mn)6-7
(AsO3)12•4H2O
இனங்காணல்
மோலார் நிறை2,230.31 கி/மோல்
நிறம்அடர் பழுப்பு
படிக இயல்புகனசதுரம்/எண்முக படிகங்கள்
படிக அமைப்புசமவச்சு கனசதுரம்
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை5 12 - 6
மிளிர்வுதுணை உலோகம்
கீற்றுவண்ணம்மஞ்சள் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் மற்றும் ஒளிபுகாது
ஒப்படர்த்தி3.9
ஒளியியல் பண்புகள்சமவச்சு
ஒளிவிலகல் எண்n = 2.2
மேற்கோள்கள்[1][2][3]

காஃபார்சைட்டு (Cafarsite) என்பது (Ca8(Ti,Fe2+,Fe3+,Mn)6-7(AsO3)12•4H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கால்சியம் இரும்பு ஆர்சனைட்டு கனிமமாகும். மாங்கனீசும் தைட்டானியமும் இவ்வாய்ப்பாட்டில் இரும்புடன் சேர்ந்து தோன்றுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் வேலைசு மண்டலத்திலுள்ள பிண்டல் பள்ளத்தாக்கில் முதன்முதலாக 1966 ஆம் ஆண்டு காஃபார்சைட்டு கண்டறியப்பட்டது. பகுதிக்கூறுகளாக இடம்பெற்றுள்ள கால்சியம், இரும்பு, ஆர்சனிக் ஆகிய தனிமங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு காஃபார்சைட்டு என்ற பெயர் உருவாக்கப்பட்டது [2][1][3]. இத்தாலி நாட்டின் வடமேற்கு மண்டலத்திலும் கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தின் தண்டர்பே மாவட்டத்திலுள்ள எம்லோ தங்கச் சுரங்கத்திலும் காஃபார்சைட்டு கனிமம் கிடைக்கிறது [3][2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஃபார்சைட்டு&oldid=2808819" இலிருந்து மீள்விக்கப்பட்டது