கவிதா ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா ஜெயின்
அமைச்சர், அரியானா அரசு
பதவியில்
26 அக்டோபர் 2014 – 27 அக்டோபர் 2019
அமைச்சர்
காலம்
பெண்கள் & குழந்தைகள் நலத்துறை26 அக்டோபர் 2014 - 27 அக்டோபர் 2019
உள்ளாட்சி துறை அமைச்சர்22 சூலை 2016 - 27 அக்டோபர் 2019
சமூக நீதித்துறை அமைச்சர்26 அக்டோபர் 2014 - 22 சூலை 2016
பட்டிலியத்தவர் & பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர்26 அக்டோபர் 2014 - 24 சூலை 2015
அரியான சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2019
முன்னையவர்அணில் குமார் தாக்கர்
பின்னவர்சுரேந்திர பன்வார்
தொகுதிசோனிபத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 செப்டம்பர் 1972 (1972-09-02) (அகவை 51)
ரோத்தக், அரியானா
இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இராஜிவ் ஜெயின்
பிள்ளைகள்1 மகள், 1 மகள்
கல்விமுதுநிலை வணிகவியல், இளங்கலை கல்வியியல்
வேலைஅரசியல்வாதி

கவிதா சுரேந்தர் குமார் ஜெயின் (Kavita Jain)(பிறப்பு: செப்டம்பர் 2, 1972) என்பவர் அரியான மாநிலத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சோனிபத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியாவின் அரியானா மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜெயின், அரியானா முதல்வரின் ஊடக ஆலோசகராக இருந்த ராஜீவ் ஜெயினை மணந்தார்.[1] இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜெயின் ரோத்தக்கில் முதுநிலை வணிகவியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2009 மற்றும் 2014-ல், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் சோனிபத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் வெற்றிபெற்றுஅரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 அக்டோபர் 2014 அன்று, இவர் அரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார்.[2]

ஒரு அமைச்சராக, இவர் பின்வரும் துறைகளின் பொறுப்பை வகிக்கிறார்.

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துறை, அரியானா
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அரியானா
  • சட்டம் மற்றும் நீதித்துறை,[3] அரியானா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajiv Jain appointed media adviser to Haryana Chief Minister Khattar". Tribune India. April 6, 2018. https://www.tribuneindia.com/news/haryana/rajiv-jain-appointed-media-adviser-to-haryana-chief-minister-khattar/569643.html. 
  2. 2.0 2.1 "MLA Details". haryanaassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
  3. Minister, Contact. "Kavita Jain Contact Details". My Minister (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_ஜெயின்&oldid=3731331" இலிருந்து மீள்விக்கப்பட்டது