கள்ளிச்செல்லம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளிச்செல்லம்மா 1969 ல் வெளிவந்த மலையாளப் படம். பிரேம் நசீர், ஷீலா நடித்தது. இயக்கம் பி பாஸ்கரன். ஒளிப்பதிவு பெஞ்சமின் (வண்ணம்). கள்ளிச்செல்லம்மா என்றபேரில் மலையாள நாவலாசிரியர் ஜி. விவேகானந்தன் எழுதிய நாவலின் திரைப்பட வடிவம். கதைத்திரைக்கதையை ஜி விவேகானந்தனே எழுதினார். தலித் சாதியை சேர்ந்த ஓர் இளம்பெண் தனித்து வாழ்வதற்காக நிகழ்த்தும் போராட்டமே இந்த நாவலாகும்.[1][2][3]

கே. ராகவன் மாஸ்டர் இசையமைத்த இந்த சினிமா மலையாளத்திரையிசை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. இதில் மலையாளத்தில் பின்னாளில் பெரும்புகழ்பெற்ற இரு பாடகர்கள் அறிமுகமானார்கள். கெ. ஜெயச்சந்திரன் ‘கரிமுகில் காட்டிலே’ என்ற பாடலையும் பிரம்மானந்தன் ‘மானத்தே காயலில்’ என்ற பாடலையும் முதல்முறையாகப் பாடியிருந்தார்கள். ரூபவாணி திரைக்கூடத்துக்காக சோபனா பரமேஸ்வரன்நாயர் தயாரித்திருந்தார்

மேற்கோள்கள்[தொகு]

  1. Vijayakumar, B. (18 January 2015). "Kallichellamma: 1969". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220620093637/https://www.thehindu.com/features/metroplus/old-is-gold-kallichellamma/article6799126.ece. 
  2. "STATE FILM AWARDS". prd.kerala.gov. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  3. "Tributes paid to yesteryear film director". தி இந்து. 21 May 2010 இம் மூலத்தில் இருந்து 25 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100525232122/http://www.hindu.com/2010/05/21/stories/2010052150590200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளிச்செல்லம்மா&oldid=3919805" இலிருந்து மீள்விக்கப்பட்டது