கலாசார விருது (சிங்கப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலாசார விருது (Cultural Medallion) என்பது சிங்கப்பூரில் நடனம், அரங்கு, இலக்கியம், இசை, ஒளிப்படவியல், கலை, திரைப்படம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உயர் அரசு விருதாகும். 1979 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஓங் டெங் சியோங், அப்போது கலாசார அமைச்சராக இருந்த போது இதனை ஆரம்பித்து வைத்தார். இவ்விருது சிங்கப்பூர் தேசிய கலைப் பேரவையினால் நிருவகிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுடன் அவர்களின் புதிய ஆக்கங்களை வெளியிடுவதற்கான ஊக்கத்தொகையாக 80,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை பணப் பரிசும் வழங்கப்படுகிறது.[1]

முன்னர் இவ்விருது கலாசார அமைச்சரினால் வழங்கப்பட்டு வந்தது. 2006 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரினால் தலைவர் மாளிகையில் வைத்து வழங்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் பரிசு பெறும் விருதாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.[2]

2013 ஆம் ஆண்டு முதல், பல்-துறைக் கலைஞர்களையும் கௌரவிக்கும் முகமாக, கலாசார விருது பெறும் விருதாளர்களின் துறைகள் அறிவிக்கப்படுவதில்லை.[3]

கலாசார விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பகுப்பு பெயர்
1979 நடனம் மாதவி கிருஷ்ணன்
நாடகம் பானி பிங் புவாங்
இசை சூ ஹோயி
டேவிட் லிம் கிம் சான்
இலக்கியம்ம் எட்வின் நடேசன் தம்பு
கலை வீ பெங் சொங்
1981 நடனம் கோ சூ கிம்
நாடகம் ஜொவானா வொங் கீ ஹெங்
இசை அகமது பின் ஜாஃபர்
இலக்கியம் வொங் மென் வூன்
கலை லீ ஹொக் மோ
இங் எங் டெங்
1982 நாடகம் லின் சென்
இசை லியோங் யூன் பின்
இலக்கியம் கோ போ செங்
புகைப்படம் டேவிட் டாய் போய் செர்
கலை ஜார்ஜெட் சென் லியிங்
1983 நாடகம் கிறித்தோபர் என்றி ரொத்வெல் அலென்
இசை விவியன் கோ
இலக்கியம் ஆர்தர் யாப்
புகைப்படம் ஆங் சுவீ சாய்
1984 நாடகம் எஸ். வரதன்
இசை காம் யீ யொங்
புகைப்படம் யிப் சொங் ஃபுன்
கலை தாமசு யோ
1985 நாடகம் லோ இங் சிங்
இலக்கியம் லீ த்சூ பெங்
புகைப்படம் தான் லிப் செங்
கலை தாய் சீ தோ
1986 நடனம் கோ சூ சான்
நாடகம் அல்மாடி அல்-ஹாஜ் இப்ராகிம்
என். பழனிவேலு
இசை பவுல் அபிசேகநாதன்
இலக்கியம் வொங் யூன் வா
கலை பான் சோ
தியோ எங் செங்
1987 நடனம் சொம் சயித்
நாடகம் மாக்சு லீ பொன்ட்
இசை தெங் மா செங்
இலக்கியம் ஹஜ் முகம்மது ஆரிப் பின் அகமது
புகைப்படம் லீ லிம்
கலை தான் சுவீ ஹியான்
1988 நடனம் லிம் ஃபெய் சென்
நாடகம் தாய் பின் வீ
இசை அலெக்ஸ் அபிசேகநாதன்
இலக்கியம் என். அப்துல் ரகுமான்
புகைப்படம் சுவா சூ பின்
கலை இசுக்காந்தர் ஜலீல்
1989 நடனம் நீலா சத்தியலிங்கம்
நாடகம் கோ பாவோ குன்
புகைப்படம் ஃபூ தீ ஜுன்
கலை கோ பெங் குவான்
1990 நடனம் சாந்தா பாஸ்கர்
நாடகம் ஆன் லோ தா
இசை லிம் யாவு
இலக்கியம் சூ கொக் சாங்
புகைப்படம் பெங் செங் வூ
கலை அந்தோனி பூன்
ஓங் கிம் செங்
1992 நடனம் யிங் ஈ டிங்
நாடகம் பான் வெயிட் ஹொங்
இசை சூ குவீ லிம்
கலை வாங் சூ பிக்
1993 இசை தாய் தொயோ கியாட்
1995 நடனம் கோ லாய் குவான்
கலை ஆன் சாய் போர்
1996 இசை பூன் யூ தியென்
இலக்கியம் லூ பூ சான்
1997 நாடகம் லோ மீ வா
இலக்கியம் மின்பொங் ஹோ
1998 இலக்கியம் ராமா கண்ணபிரான்
1999 இலக்கியம் அப்துல் கானி பின் அப்துல் ஹமீத்
கலை சுவா எக் காய்
2000 கலை தான் சியா குவீ
2001 கலை தான் கியான் போர்
இசை யான் ஹூய் சாங்
2002 இசை ஜெரெமி மொன்டெய்ரோ
2003 கலை லிம் சி பெங்
நாடகம் ஒங் கெங் சென்
இலக்கியம் யெங் புவாய் ஙொன்
2004 புகைப்படம் தொயோ பீ யென்
2005 திரைப்படம் சாக் நியோ
இலக்கியம் எம். பாலகிருஷ்ணன் (எம். ஏ. இளங்கண்ணன்)
இசை டிக் லீ
காட்சிசார் கலைகள் சிங் சியோக் ஹ்டின்
லீ வென்
2006 கலை தான் சோ டீ
இசை லினெட் சியா
2007 திரைப்படம் எரிக் கூ
இலக்கியம் ஈசா கமாரி
2008 இலக்கியம் சியா குவீ பெங்
பி. கிருஷ்ணன்
இசை இசுக்காந்தர் மிர்சா இசுமாயில்
2009 நடனம் அஞ்செலா லியோங்
இலக்கியக் கலைகள் தாம் யூ சின்
இசை லான் சூயி
காட்சிசார் கலைகள் ஆங் ஆ தீ
2010[4] இசை லியாங் வெர்ன் ஃபோக்
காட்சிசார் கலைகள் சுரத்மன் மர்க்காசான்
காட்சிசார் கலைகள் அமான்டா ஹெங்
2011[5] இசை கெலி தாங்
காட்சிசார் கலைகள் லிம் யூ குவான்
நாடகம் அத்தின் அமாட்
இசை யுஸ்னோர் எஃப்
2012[6] இலக்கியக் கலைகள் ஜே. எம். சாலி
இசை ஜெனிபர் தாம்
நாடகம் திருநாளன் சசிதரன்
காட்சிசார் கலைகள் ஹோ ஹோ யிங்
மிலெங்கோ பிர்வாக்கி
2013[7] - வான் ஹெங்
- முகம்மது லத்தீப் முகம்மது
- சுங் யே
2014[8] - அல்வின் தான்
- சொங் ஃபா சியோங்
- க. து. மு. இக்பால்

மேற்கோள்கள்[தொகு]

  1. Clara Chow, "SSO co-leader, versatile artist get highest award for the arts", ஸ்ட்ரெயிட் டைம்சு, 21 அக்டோபர் 2006
  2. "Epigram Books Presents 10 New Titles and 25 Authors at the Singapore Writers Festival 2013!". Epigram Books. Epigram Books. Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Cultural Medallion & Young Artist Award Winners" (PDF). National Arts Council. National Arts Council. Archived from the original (PDF) on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2010 கலைS AWARDS PRESENTATION CEREMONY". 2010-10-12. Archived from the original on 2010-12-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  5. "Four individuals awarded Cultural Medallion". 2011-11-18. Archived from the original on 2011-11-19. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
  6. "Cultural Medallion & Young கலைist Award Winners" (PDF). National கலைs Council. National Arts Council. Archived from the original (PDF) on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Martin, Mayo (22 October 2013). "Cultural Medallion, Young Artist Award recipients announced". TODAY. MediaCorp. http://www.todayonline.com/entertainment/arts/cultural-medallion-young-artist-award-recipients-announced?singlepage=true. பார்த்த நாள்: 2 September 2014. 
  8. Chia, Alice (15 October 2014). "Cultural Medallion winners: A poet, a sculptor and a theatre director". Channel NewsAsia. MediaCorp Pte Ltd. http://www.channelnewsasia.com/news/singapore/cultural-medallion/1415892.html. பார்த்த நாள்: 15 October 2014. 

உசாத்துணைகள்[தொகு]

  • Purushothaman, Venka (ed.) (2002) Narratives : Notes On A Cultural Journey : Cultural Medallion Recipients 1979 - 2001. Singapore : National Arts Council.

வெளி இணைப்புகள்[தொகு]