கரடிப் பேரேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கரடிப் பேரேரி | |
|---|---|
|
|
|
| ஆள்கூறுகள் | அமைவிடம்: |
| வெளிப்பாய்ச்சல் | கிரேட் பெயர் ஆறு |
| வடிநிலம் | 114,717 km² (44,293 mi²)[1][2] |
| வடிநில நாடுகள் | கனடா |
| மேற்பரப்பளவு | 31,153 km² (12,028 mi²)[1][2] |
| சராசரி ஆழம் | 71.7 m (235 ft)[1][2] |
| அதிகபட்ச ஆழம் | 446 m (1,463 ft)[1][2] |
| நீர் கனவளவு | வார்ப்புரு:Km3 to mi3[1][2] |
| இருப்புக் காலம் | 124 ஆண்டுகள்[1] |
| கரை நீளம்1 | 2,719 km (1,690 mi) (+ 824 km (512 mi) தீவுகளின் கரையோரம்)[1][2] |
| மேற்பரப்பின் உயரம் | 186 மீ (610 அடி) |
| தீவுகள் | 26 முக்கியமான தீவுகள், மொத்தம் 759.3 கிமீ² பரப்பளவு[1] |
| குடியிருப்புகள் | டிலைன், எக்கோ குடா |
| 1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளிவீடல்ல. | |
கரடிப் பேரேரி (Great Bear Lake) முழுமையாகக் கனடாவில் இருக்கும் மிகப் பெரிய ஏரியாகும். கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லையில் அமைந்து கனடாவுக்குள் ஒரு பகுதி மட்டுமே இருக்கும் சுப்பீரியர் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை இதை விடப் பெரியவை. இது வட அமெரிக்காவின் மூன்றாவது பெரியதும், உலகின் ஏழாவது பெரியதுமான ஏரியாகும். ஆர்க்டிக் வட்டத்தில் 65 - 67 பாகை வடக்கு அகலக்கோடுகளுக்கும், 118 - 123 பாகை மேற்கு நெடுங்கோடுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இவ்வேரி கடல் மட்டத்திலிருந்து 186 மீ (610 அடி) உயரத்தில் உள்ளது.
இந்த ஏரி 31,153 km² (12,028 mi²) மேற்பரப்பளவும் 2,236 கிமீ³ (536 மை³) மொத்த நீர்க் கொள்ளளவும் உடையது. இதன் அதிக பட்ச ஆழம் 446 மீ (1,463 அடி). சராசரி ஆழம் 71.7 மீ (235 அடி). 2,719 கிமீ (1,690 மை) மொத்தக் கரையோர நீளத்தைக் கொண்ட இவ்வேரியின் நீரேந்து பகுதி 114,717 கிமீ² (44,293 மை²) ஆகும்.
இவ்வேரி நீர் கிரேட் பெயர் ஆற்றினூடாக மக்கன்சி ஆற்றினுள் வெளியேறுகிறது. தென்மேற்கு முனையில் உள்ள, டிலைன், தென்மேற்கு ஆட்சிப்பகுதி மட்டுமே இந்த ஏரிக்கரையில் உள்ள ஒரே குடியிருப்புப் பகுதியாகும்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புக்கள்
- கரடிப் பேரேரி Watershed (ஆங்கிலத்தில்)
- உலக ஏரிகள் தரவுத்தளம் (ஆங்கிலத்தில்)
- கரடிப் பேரேரியின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (ஆங்கிலத்தில்)
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found