கயிறு திரித்தல் (தமிழர் தொழிற்கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயிறு திரித்தல் என்பது தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் ஆகும். தமிழர் தாயகப் பகுதிகளில் தென்னை அதிகம் வளர்க்கப்படுவதால் பல ஊர்களில் கயிறு திரித்தல் முக்கிய தொழிலாக உள்ளது.

தென்னங் கயிறுகள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன. சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தாதவை. எனினும் அண்மைக் காலமாக நெகிழிக் கயிறுகள் அதிக பயன்பாட்டிற்கு வருவதால் இத் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.