கபிலரின் கைமாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]

கபிலரும் பாரியும்[தொகு]

கபிலர் பாண்டிய நாட்டில் திருவாதவூர் எனும் ஊரில் பிறந்தார்.ஆரம்பகாலத்தில் பாண்டிய அரசவைக்கவிஞராக இருந்து பின்பு மதுரையை விட்டு வெளியேறி பல்வேறு அரசவைகளில் பங்குபெற்றார்.இச்சமயம் வேளிர் மன்னர்களில் தலைசிறந்த பாரி வள்ளல் பற்றியும் அவரின் நற்பண்புகள், மற்றும் கொடைத்தன்மை பற்றியும் கேள்வியுற்று பறம்பு நாட்டிற்குச் சென்று மன்னரின் உற்ற நண்பனாக தனது கடைசி வாழ்நாள் வரை இருந்தார்.

கபிலரின் கைமாறு[தொகு]

கபிலர் மன்னர் பாரி இறப்புக்குப் பின்னர் பாரியின் இரு மகள்களான அங்கவை, சங்கவை இருவருக்கும் பாதுகாவலராக திகழ்ந்தார். பின்பு பரம்பு நாட்டைவிட்டு மூவரும் வெளியேறினர். பாரியின் மகள்களுக்கு வேளிர் அரச குடும்ப மணமகன் தேடுவதில் தோல்வியடைந்தார். இறுதியில் அவர்களை ஒரு பிராமணக்குடும்பதில் பாதுகாப்பாக விட்டுச்சென்றார். பிற்காலத்தில் அவர்களை ஒளவையார் பாதுகாத்து, இறுதியாக வேளிர் இன மன்னர் மலையமான் காரி குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்தார் என சான்றுகள் உள்ளன.

  1. "kapilar". பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலரின்_கைமாறு&oldid=2348135" இலிருந்து மீள்விக்கப்பட்டது