கனேடியத் தமிழ் ஒலிபரப்புத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடிய தமிழ் ஊடகங்களில் ஒலிபரப்புத்துறை அல்லது வானொலிகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.
பொருளடக்கம் |
வானொலிகள்[தொகு]
- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - CTBC
- கீதவாணி
- கனேடிய தமிழ் வானொலி - CTR
- மொன்ரியல் தமிழ் ராகம் MTR
- தமிழ்ப் பண்பலை 101.3 - CMR
- அனைத்துலக தமிழ் வானொலி - GTR
- தமிழ் ஸ்ரார் வானொலி
- சர்வதேச தமிழ் வானொலி - ITC
- ஆமென் வானொலி
- வணக்கம் பண்பலை 105.9
- ஏ9 வானொலி - [1]
- கலசம் (இணைய வானொலி)- [2]
- வெளிச்சம் (இணைய வானொலி) - [3]
மொழி நடை[தொகு]
தொடக்க காலத்தில் பழைய இலங்கை வானொலிக் கலைஞர்கள் பலர் கனேடிய தமிழ் ஒலிபரப்புத்துறையில் பங்கு கொண்டதால் செய்தி வாசிப்பு, உரையாடல் என அனேக நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கலப்பில்லாத தமிழ் மொழிக்காவும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் கனேடிய தமிழ் வானொலிகள் இருந்தது.
வரலாறு[தொகு]
கனடாவில் 1980 களின் இறுதியில் இருந்து தமிழில் நிகழ்சிகள் ஒலிபரப்ப தொடங்கின. முதன் முதலாக 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவை கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் 1996 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிறப்பு அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இதைக் கேட்பதற்கு தனியான ஒரு வானொலி பெற வேண்டும். பண்பலை அலைவரிசையில் பெரும்பாலும் தமிழ் நிகழ்சிகளைக் கொண்டு கனேடிய பல்லினப்பண்பாட்டு வானொலி 2004 இல் தொடங்க்ப்பட்டது.