கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை ( Canadian Tamil cinema) என்பது கனடா வாழ் தமிழர்களால் தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த திரைப்படத்துறையில் பெரும்பாலும் ஈழத் தமிழர்கள் மற்றும் சிரியளவாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் பணி புரிகிறார்கள்.

இது தமிழர்களின் பண்பாடுகளைப் பேணும் வகையிலும் கனடாவின் இளம் சமூகத்தினூடே தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு போன்றவற்றினை வளர்ப்பதற்காகவும் தமிழ்த் திரையரங்குகளிலும் திரைப்பட விழாக்களிலும் கனேடியத் தமிழ் சமூகத்தினால் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படங்களன்றி விபரணப் படங்கள், குறும்படங்கள் போன்றவையும் வெளியிடப்படுவது குறியிடத்தக்கது.

வரலாறு[தொகு]

முதல் கனேடியத் தமிழ்த் திரைப்பட ம் 1992 ஆம் ஆண்டு வெளியான அன்பு ஊற்று என்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஏ.முருகு என்பவர் கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றதோடு தயாரித்து இருந்தார். 1995 ஆம் ஆண்டு ஏமாற்றம் என்ற திரைப்படம் வெளியானது. 1998 ஆம் ஆண்டு வெளியான உயிரே உயிரே என்ற திரைப்படம் தான் வர்த்தக நோக்கில் கனடாவில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையைக் குடுத்த முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கே. எஸ். பாலச்சந்திரன், ஆனந்தி ஸ்ரீதாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

2013 ஆம் ஆண்டு வெளியான ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்ற திரைப்படம் கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறையை அடுத்தகட்ட வளர்சிக்கு கொண்டு சென்றது. சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்றாகும்.[1] 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 14 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shanghai has action-packed competition". FBA. Archived from the original on 2013-06-22. பார்க்கப்பட்ட நாள் May 20, 2013.
  2. "Official Selection at The World Film Festival". WFF. Archived from the original on 2013-09-16. பார்க்கப்பட்ட நாள் Aug 29, 2013.