கண்டனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டனி, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், இளையாங்குடி வட்டத்தில், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெஞ்சத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] கண்டனி கிராமம், இளையாங்குடியிலிருந்து 5 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் நடுவே அமைந்த, கண்டனி கிராமத்தின் அருகமைந்த பேரூர்கள் இளையாங்குடி மற்றும் பரமக்குடி ஆகும்.

கண்டனி கிராமத்திற்கு அருகைந்த சிற்றூர்கள் நெஞ்சத்தூர், சூராணம், சேத்துக்குடி, கண்னமங்கலம், தேவதாகுடி, தாயமங்கலம், உத்தமனூர், நாகமுகுந்தன்குடி, திருவள்ளூர், அரணையூர், தூகாவூர், விராயதகண்டன், கட்டனூர் ஆகும். [2] மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட கண்டனி கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 630713 மற்றும் தொலைபேசி குறியிடு எண் 04574 ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

நெஞ்சத்தூர் ஊராட்சி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டனி&oldid=3298714" இலிருந்து மீள்விக்கப்பட்டது