ஓட்டோ சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓட்டா சுழற்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்னாட் வெப்ப இயக்கப் பொறி
ஓட்டோ சுழற்சியின் அழுத்தம்-கொள்ளளவு விளக்கப் படம்

ஓட்டோ சுழற்சி என்பது உள் எரி பொறியில் பயன்படும் ஒரு வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது ஊடாடு உந்துதண்டு (அல்லது ஆடுதண்டு) கொண்ட பொறி பற்றல் எந்திரத்தின் இயக்கத்தை விவரிக்க வல்லது. நிக்கோலஸ் ஓட்டோ என்னும் செருமானியப் பொறியாளரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கொள்ளளவு மாறாத நிலையில் எரிப்பு (combustion) நிகழ்கிறது. அதாவது வெப்ப இயக்கச் சுழற்சியின் போது கொள்ளளவை மாறிலியாக வைத்துக்கொண்டு எரிப்பு நிகழ்கிறது. இந்தச் சுழற்சியில் மாறாக் கொள்ளளவில் வெப்பமாக்கல் நிகழ்வு இரண்டும், அகவெப்பமாறா நிலையில் கொள்ளளவு சுருங்குதல் மற்றும் விரிவடைதல் நிகழ்வும் நடைபெறுகின்றன. இதனை அழுத்தம்-கொள்ளளவு விளக்கப் படம் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும்.

வழிமுறை[தொகு]

இவ்வழிமுறைகளைப் பின்வருமாறு விளக்கலாம்[1]

வழிமுறை 1-2 : அகவெப்பமாறா நிலையில் கொள்ளளவு குறையும் நிகழ்வு
வழிமுறை 2-3 : மீளக்கூடிய மாறாக் கொள்ளளவில் வெப்பமாக்கல் நிகழ்வு
வழிமுறை 3-4 : அகவெப்பமாறா நிலையில் கொள்ளளவு விரிவடைதல் நிகழ்வு
வழிமுறை 4-1 : மீளக்கூடிய மாறாக் கொள்ளளவில் குளிர்விக்கும் நிகழ்வு

இந்த வழிமுறையின் மூலமாகப் பெட்ரோல் வெப்ப இயக்கப் பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

Wஉள் - என்பது வாயு சுருங்குவதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qஉள் - என்பது பெட்ரோல் அல்லது எரிபொருள் மூலமாக உருவாக்கப்பட்ட வெப்ப ஆற்றல்
Wவெளி - என்பது வாயு விரிவடைதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qவெளி - என்பது மீதமுள்ள எரிபொருளின் வெப்ப ஆற்றல்
உள் என்பது உள்ளீட்டையும் வெளி என்பது வெளியீட்டையும் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Moran, Michael J., and Howard N. Shapiro. Fundamentals of Engineering Thermodynamics. 6th ed. Hoboken, N.J. : Chichester: Wiley ; John Wiley, 2008. Print.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டோ_சுழற்சி&oldid=1524652" இருந்து மீள்விக்கப்பட்டது