ஒற்றை, இரட்டை வரிசைமாற்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில், வரிசைமாற்றங்கள் ஒற்றைப்படை வரிசைமாற்றங்கள், (Odd permutations) இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் (Even permutations) என இருவகைப்படும்.ஒவ்வொரு வரிசைமாற்றமும் அது எத்தனை இடமாற்றங்களின் சேர்வையாக இருக்கிறது என்பதைப் பொருத்து அது ஒற்றைப்படையாகவோ இரட்டைப்படையாகவோ வகைப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக

\begin{pmatrix}
1 &2 &3 & 4 & 5\\
2& 4 & 3 & 5 & 1
\end{pmatrix} = (3) (1245)= (15)(14)(12)= மூன்று இடமாற்றங்களின் சேர்வை

இதனால் இது ஒரு ஒற்றைப்படை வரிசைமாற்றம்.

மாறாக,

\begin{pmatrix}
1 & 2 & 3 & 4 & 5\\
4 & 2 & 5 & 1 & 3
\end{pmatrix} =  (14)(235)  = (2)(14)(35) = இரண்டு இடமாற்றங்களின் சேர்வை

இதனால் இது ஒரு இரட்டைப்படை வரிசைமாற்றம்.


பொருளடக்கம்

[தொகு] வரிசைமாற்றத்தின் குறி

ஒரு வரிசைமாற்றம் A-இன் குறி (Sign, Signature)என்பது +1 ஆகவோ -1 ஆகவோ வரையறுக்கப்படும். ஒற்றைப்படை வரிசைமாற்றமயிருந்தால் அதன் குறி -1. இரட்டைப்படையாயிருந்தால், +1. இதற்குக் குறியீடு: sgn(A) அல்லது ε(A).

\chi: S_n \rightarrow \{+1, -1\}
A \mapsto  sgn(A)

தேற்றம்: சமச்சீர்குலம் Sn க்கும் 2-ஆவது கிரம சுழற்குலம் C2 = { + 1, − 1} க்கும் இடையில் χ என்ற மேற்சொன்ன கோப்பு, ஒரு காப்பமைவியம் (homomorphism).

[தொகு] மாறிசைக்குலம்

இதனால் இக்காப்பமைவியத்தின் உட்கரு (kernel) Sn இன் உட்குலமாகும். இந்த உட்குலத்திற்கு n பொருள்களின் மாறிசைக்குலம் (Alternating Group on n objects) எனப் பெயர். இதற்குக் குறியீடு: An . இதனுடைய கிரமம்: n! / 2. இவ்வுட்குலத்தில் இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் மட்டுமே உள்ளன; n-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம் இதனில் அடக்கம்.

[தொகு] எடுத்துக்காட்டு

S4 இல் 24 உறுப்புகள் உள்ளன. A4 இன் 12 உறுப்புகள் (அ-து, 4-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம்) பின்வருமாறு:

e ; (1)(234);(1)(243);
(2)(341);(2)(314);(3)(124);(3)(142);(4)(123);(4)(132
(12)(34);(13)(24);(14)(23).

[தொகு] விளைவுகள்

  • இரட்டைப்படை நீளமுள்ள சுழல் ஓர் ஒற்றைப்படை வரிசைமாற்றம்.
  • ஒற்றைப்படை நீளமுள்ள சுழல் ஓர் இரட்டைப்படை வரிசைமாற்றம்.
  • ஒரு வரிசைமாற்றம் அதனுடைய வெட்டில்லாத சுழல் வடிவத்தில் இரட்டைப்படை நீளமுள்ள சுழல்கள் ஓர் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருந்தால், இருந்தால்தான், அது ஒற்றைப்படை வரிசைமாற்றமாக இருக்கும்.

எ.கா.: S16:

\sigma  = (1\quad 3\quad 5)(7\quad 2\quad 4)(10\quad  6)(8\quad  11\quad  16\quad  15\quad  9) (14)(12 \quad 13)

இதனில் 2 இரட்டைப்படை நீளமுள்ள சுழல்கள் இருப்பதால், σ ஓர் இரட்டைப்படை வரிசைமாற்றம்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்