ஏமி வைன்ஹவுஸ்
ஏமி வைன்ஹவுஸ் Amy Winehouse | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஏமி ஜேட் வைன்ஹவுஸ் |
பிறப்பு | சவுத்கேட், லண்டன், இங்கிலாந்து | 14 செப்டம்பர் 1983
இறப்பு | 23 சூலை 2011 கேம்டன், லண்டன், இங்கிலாந்து | (அகவை 27)
இசை வடிவங்கள் | Soul, R&B, ஜாஸ் |
தொழில்(கள்) | பாடகி, பாடலாசிரியை |
இசைக்கருவி(கள்) | கிட்டார் |
இசைத்துறையில் | 1998–2011 |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஐலண்ட், லயனெஸ் |
இணையதளம் | http://www.amywinehouse.com |
ஏமி ஜேட் வைன்ஹவுஸ் (Amy Jade Winehouse, செப்டம்பர் 14, 1983 - சூலை 23, 2011)[1] ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆங்கில பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். 2003ல் வெளிவந்த இவரின் ஃபிராங் என்ற இசைத்தட்டு ஐக்கிய இராச்சியத்தில் பெரும் வெற்றி பெற்றது. இது மெர்க்குரி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2006ல் வெளி வந்த பேக் டு பிளாக் என்ற இசைத்தட்டு 6 கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை பெற்றது. இவரே 5 கிராமிய விருதுகளை வென்ற முதல் பிரித்தானியர் ஆவார்.[2][3] சிறந்த பிரித்தானிய பெண் கலைஞருக்கு வழங்கப்படும் பிரிட் விருதை 2007ல் பெற்றார்.
பிரித்தானியாவில் இசைத்துறை புத்துயிர் பெற இவரின் இசை வெற்றி காரணமாகவிருந்தது. இவரின் தனிப்பட்ட பாணி காரணமாக அலங்கார வடிவமைப்பாளர்கள் பலரின் ஆதரவை பெற்றிருந்தார். இவர் போதை மருந்துகளும் மதுவும் அதிகளவில் பயன்படுத்தி அதனால் பல சிக்கல்களை சந்தித்தார். இவர் தன் பெயர் கெடும் விதமாக நடக்கும் நடத்தையினால் 2007 முதல் இறக்கும் வரை சிறு பக்க செய்தி இதழ்கள் பெரும்பாலும் இவரைப்பற்றி செய்தி வெளியிட்டன. இவரும் இவரின் முன்னாள் கணவருமான பிளேக் ஃபில்டரும் பல சட்ட சிக்கல்களை சந்தித்தனர். இதன் காரணமாக அவரின் முன்னாள் கணவர் சிறை தண்டனை அனுபவித்தார். 2008ல் இவர் பல உடல் நலக்கேடுகளால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரின் உடல்நலமும் தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியது[4].
இவர் தன் 27ம் வயதில் 23 சூலை, 2011 அன்று தனது லண்டன் இல்லத்தில் மரணமடைந்தார். காவல் துறை இவரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என கூறியுள்ளது"[5][6][7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BBC News website 23 July 2011: Obituary: Amy Winehouse Retrieved 2011-07-23
- ↑ Yes, America, Amy Winehouse Is a Star. BBC Worldwide America. 11 February 2008. Retrieved 12 February 2008.
- ↑ Winehouse, Alex (13 February 2008). "Amy Winehouse's brother on her return to form". The Times.
- ↑ "Singer Winehouse 'has emphysema'.". BBC. 23 June 2008. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7468655.stm. பார்த்த நாள்: 1 January 2010.
- ↑ David Sillito (23 July 2011). "Amy Winehouse found dead, aged 27". BBC. http://www.bbc.co.uk/news/uk-14262237. பார்த்த நாள்: 23 July 2011.
- ↑ David Batty and agencies (23 July 2011). "Amy Winehouse dies aged 27". The Guardian. http://www.guardian.co.uk/music/2011/jul/23/amy-winehouse-dies-aged-27.
- ↑ "Amy Winehouse Found Dead". TMZ. 23 July 2011. http://www.tmz.com/2011/07/23/amy-winehouse-dead-dies-london-apartment. பார்த்த நாள்: 23 July 2011.