எஸ். கந்தப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. கந்தப்பன் (S. Kandappan)(பிறப்பு சூலை 15, 1933) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சேலம் மாவட்டம் எடப்பாடியினைச் சார்ந்த இவர், எடப்பாடி உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியிலும் சென்னை, மாநிலக் கல்லூரியிலும் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியினை பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான, கந்தப்பன் 1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 137. {{cite book}}: More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கந்தப்பன்&oldid=3943228" இலிருந்து மீள்விக்கப்பட்டது