எம். எல். ஏ (1957 திரைப்படம்)
எம். எல். ஏ | |
---|---|
இயக்கம் | கே. பி. திலக்[1] |
தயாரிப்பு | கே. பி. திலக் |
இசை | பெந்தியாலா (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ஜக்கையா சாவித்திரி |
வெளியீடு | 1957 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
எம். எல். ஏ என்பது 1957 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி சமூக அரசியல் திரைப்படமாகும். கே. பி. திலக் இயக்கியிருந்தார். [1] திரைப்படத்தில் கேபி திலக்கே தயாரித்தும் இருந்தார்.
இப்படம் எம். எல். ஏ என்ற தலைப்பிலேயே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1957ல் வெளியானது.
நடிகர்கள்[தொகு]
- ஜக்கையா - தாஸ்
- சாவித்திரி - நிர்மலா
- கும்மடி - தாமோதரன்
- இரமண மூர்த்தி - ரமேஷ்
- கிரிஜா - கமலா
- இரமண ரெட்டி
- நாகபூசணம்
திரை முக்கியத்துவம்[தொகு]
இத்திரைப்படம் நடிகர் ஜே.வி. ரமண மூர்த்தியின் முதல் படம் ஆகும். பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடிய முதல் படம். அவரது முதல் பாடல் 'நீ ஆசா அடியாசா லம்படோல்லா ராம்தாசா' என்பதாகும்
இசை[தொகு]
ஆருத்ராவின் பாடல் வரிகளுக்கு, பெந்தியாலா நாகேஸ்வரராவ் இசை அமைத்துள்ளார். கண்டசாலா, எஸ். ஜானகி, பி. சுசீலா, மாதவப்பெட்டி சத்யம், ஜிக்கி, ஏ.எம்.ராஜா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 M. L. Narasimham. "M.L.A (1957)". The Hindu.
வெளி இணைப்புகள்[தொகு]
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் எம். எல். ஏ (1957 திரைப்படம்)
- யூடியூபில் Kaaman kandu mogam - A song sung by பி. பி. ஸ்ரீனிவாஸ் and ஜிக்கி from the dubbed Tamil version.