எம். எசு. பாசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எம். எஸ். பாஸ்கர் (மு. சோ. பாசுகர் ) என்பவர் நடிகர் மற்றும் பின்னனி குரல் கொடுப்பவர் ஆவார். இவரது தந்தை முத்துப்பேட்டை சோமு தேவர், தாயார் சத்தியபாமா. இவரது தந்தை நிலக்கிழார் ஆவார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னனி குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா மும்பையில் பின்னனி குரல் கொடுப்பவராகவும் உள்ளனர். இவருக்கு தம்பி ஒருவர் உள்ளார்.

இவரது தந்தை முத்துப்பேட்டையாக இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சி தொடர்களான சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் அதிகம் அறியப்படுகிறார். தமிழக அரசின் சிறந்த குணசித்திர நடிகர் என்ற விருது மொழி படத்திற்காக இவருக்கு கிடைத்தது[1]. இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பற்பசை நிருவனத்தில் விற்பனை பிரதிநிதியாகவும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னனி குரல் கொடுத்துள்ளார்.


மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/cp/2009/11/13/stories/2009111350241100.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எசு._பாசுகர்&oldid=1705391" இருந்து மீள்விக்கப்பட்டது