என். கே. செந்தாமரை கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கே. செந்தாமரை கண்ணன்
N. K. Senthamarai Kannan
இந்தியக் காவல் பணி
இந்தியக் காவல் பணி
பிறந்தயிடம்தமிழ்நாடு
பணிபுரிந்த பிரிவுஇந்தியா
பணியிலிருந்த ஆண்டுகள்1989-முதல்
Alma materமதுரை காமராசர் பல்கலைக்கழகம்

என். கே. செந்தாமரை கண்ணன் (N. K. Senthamarai Kannan) என்பவர் இந்திய காவல்பணி அதிகாரி ஆவார்.

காவல் பணி[தொகு]

செந்தாமரை கண்ணன்[1] இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை ஆணையாளராவார். இந்திய காவல் சேவையில் காவல் துறை பொது ஆய்வாளராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.[2][3][4] திருப்பூர் நகரத்தின் முதலாவது காவல் ஆணையாளர் என்ற சிறப்பு உரியவராக அறியப்படுகிறார்.[5][6] கே.விஜயகுமாரின் தலைமையில் சந்தனக் கடத்தல் குற்றவாளியான வீரப்பனை சுட்டுவீழ்த்த முயற்சித்த கோகூன் நடவடிக்கையில் உளவுத்துறையின் தலைமை தாங்கியதோடு சிறப்பு பணிக்குழு உளவாளியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[2][3] இவர் மேற்கொண்ட உளவு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் 2016 ஆம் ஆண்டு வீரப்பன் கொலை திரைப்படம் அமைந்துள்ளது.[7][8]

கண்ணன் 1997-ஆம் ஆண்டு தொகுதி இந்திய காவல்துறை சேவை அதிகாரி ஆவார். ஆனால் 1989 ஆம் ஆண்டில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக மாநில காவல்துறைப் பணியில் நுழைந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் இந்திய காவல் துறை அதிகாரியாக உயர்ந்தார்.[6]

கல்வி[தொகு]

செந்தாமரை கண்ணன் அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். பின்னர் 1985 முதல் அதே கல்லூரியில் பொருளாதார உதவி பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1989இல் தமிழ்நாடு மாநில காவல்துறை சேவையில் தேர்வாகி பணியில் சேரும் வரை அங்கு பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. NA, NA (2011). NEWS. News. https://www.oneindia.com/india/court-acquits-9-accused-in-rajkumars-abduction-case-2782100.html. 
  2. 2.0 2.1 "New IG assumes charge - The Hindu".
  3. 3.0 3.1 "The spy who spiked Veerappan". The Times of India.
  4. "Abducted 4-year-old traced to AP". The New Indian Express.
  5. "N.K Senthamarai Kannan SPS/IPS,promoted as IG of Police,in Tamil Nadu Government". Archived from the original on 2016-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  6. 6.0 6.1 Staff Reporter. "Chief Minister declares open police commissionerate in Tirupur". The Hindu.
  7. "Meet Senthamaraikannan, the supercop Shivarajkumar plays in Killing Veerappan". The News Minute.
  8. "The end of Veerappan".
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._செந்தாமரை_கண்ணன்&oldid=3754939" இலிருந்து மீள்விக்கப்பட்டது