எண்டெவர் விண்ணோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என்டெவர் விண்ணோடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என்டெவர்
எண்டெவர் விண்ணோடம்
என்டெவர் விண்ணோடம் STS-113 விண்கப்பலை நவம்பர் 22, 2002 கொண்டுசெல்லத் தயாராகிறது.
OV Designation OV-105
நாடு ஐக்கிய அமெரிக்கா
Contract award ஜூலை 31, 1987
Named after HM பார்க் எண்டெவர்
முதல் பயணம் STS-49
மே 7, 1992 - மே 16, 1992
கடைசிப் பயணம் STS-118
ஆகஸ்ட் 8, 2007 - ஆகஸ்ட் 21, 2007
திட்டங்களின் எண்ணிக்கை 20
விண்ணில் செலவழித்த நேரம் 206.60 days
சுற்றுகளின் எண்ணிக்கை 3,259
பயணித்த தூரம் 13,69,10,237 கிமீ (7 nmi)
அனுப்பிய செய்மதிகள் 3
மீர் dockings 1
அவிநி dockings 7
Status Active

எண்டெவர் ( சுற்றூர்தி OV-105) அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் நாசா இயக்கத்தில் வைத்துள்ள மூன்று விண் சுற்றுக்கலன்களில் ஒன்று. (மற்றவை: டிஸ்கவரி, அட்லாண்டிஸ்) 1992 -இல் STS-49 திட்டத்தின் மூலம் முதல் பயணத்தில் இண்டெல்சாட் 6 செயற்கைக்கோளை சீர்செய்ய எண்டவர் செலுத்தப்பட்டத்து. 19 வருட இயக்கத்தில் 112 பயணங்களுக்குப் பின், மே 2011இல் இறுதியாக STS-134 திட்டம் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான துகள் இயற்பியல் ஆய்வுக்கருவிகளை நிறுவியது.

என்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour) நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும்.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

1986இல் விபத்துக்குள்ளாகி மறைந்த சலேஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக என்டெவர் விண்ணோடத்தை அமைக்க 1987இல் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த டிஸ்கவரி விண்ணோடம் மற்றும் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஆகியவற்றின் உதிரிப் பாகங்களை என்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.

மே மாதம் 1991 இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே 1992 இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

STS-130 [தொகு]

அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எண்டெவர்_விண்ணோடம்&oldid=1348215" இருந்து மீள்விக்கப்பட்டது