எண்டெவர் விண்ணோடம்
|
இந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது.. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகள் மற்றும் புதிய தகவல்களுடன் புதுப்பிக்கவும். |
| என்டெவர் | |
|---|---|
என்டெவர் விண்ணோடம் STS-113 விண்கப்பலை நவம்பர் 22, 2002 கொண்டுசெல்லத் தயாராகிறது. |
|
| OV Designation | OV-105 |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| Contract award | ஜூலை 31, 1987 |
| Named after | HM பார்க் எண்டெவர் |
| முதல் பயணம் | STS-49 மே 7, 1992 - மே 16, 1992 |
| கடைசிப் பயணம் | STS-118 ஆகஸ்ட் 8, 2007 - ஆகஸ்ட் 21, 2007 |
| திட்டங்களின் எண்ணிக்கை | 20 |
| விண்ணில் செலவழித்த நேரம் | 206.60 days |
| சுற்றுகளின் எண்ணிக்கை | 3,259 |
| பயணித்த தூரம் | 13,69,10,237 கிமீ (7 nmi) |
| அனுப்பிய செய்மதிகள் | 3 |
| மீர் dockings | 1 |
| அவிநி dockings | 7 |
| Status | Active |
எண்டெவர் ( சுற்றூர்தி OV-105) அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் நாசா இயக்கத்தில் வைத்துள்ள மூன்று விண் சுற்றுக்கலன்களில் ஒன்று. (மற்றவை: டிஸ்கவரி, அட்லாண்டிஸ்) 1992 -இல் STS-49 திட்டத்தின் மூலம் முதல் பயணத்தில் இண்டெல்சாட் 6 செயற்கைக்கோளை சீர்செய்ய எண்டவர் செலுத்தப்பட்டத்து. 19 வருட இயக்கத்தில் 112 பயணங்களுக்குப் பின், மே 2011இல் இறுதியாக STS-134 திட்டம் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான துகள் இயற்பியல் ஆய்வுக்கருவிகளை நிறுவியது.
என்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour) நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
1986இல் விபத்துக்குள்ளாகி மறைந்த சலேஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக என்டெவர் விண்ணோடத்தை அமைக்க 1987இல் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த டிஸ்கவரி விண்ணோடம் மற்றும் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஆகியவற்றின் உதிரிப் பாகங்களை என்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.
மே மாதம் 1991 இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே 1992 இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
[தொகு] STS-130
அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.