எண்குணத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்குணத்தான் என்பது திருக்குறளில் கடவுள்வாழ்த்து என்ற அதிகாரத்தில் 9ஆம் குறளாகிய

"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9)

என்பதில் வழங்கும் ஒரு தொடர். அந்தச் சொற்கு எண்குணம் என்னும் எட்டுக்குணத்தொகுதியினை உடையவன் என்று பெரும்பாலான பண்டை உரையாசிரியர்கள் உரைகூறுகின்றனர். அந்த உரையாசிரியர்கள் அந்த எட்டுக்குணங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் மரபான குணங்களை மேற்கோள் காட்டி விளக்குகின்றனர்.

உரையாசிரியர்கள் உரை[தொகு]

  • மணக்குடவர் – எட்டுக் குணத்தினை உடையவன்
  • பரிதியார் – அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு – என்னும் எட்டுக் குணம்.
  • காலிங்கர் – எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவன்
  • பரிமேலழகர் – (3 வகையான 8 பிரிவுகளைக் காட்டுகிறார்)
    • (1)சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
    • (2) அணிமா முதலாக உடையன எட்டை எண்குணம் என்பர்
    • (3) கடையில்லா அறிவை முதலாக உடையன என்பர்
  • புலவர் குழந்தை – எளிமையாகிய குணம் உடையவன் எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு – என்னும் திருக்குறளில் ‘எண்’ என்னும் அடைமொழி எளிமை என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளதை இங்கு எண்ணவேண்டும்.
  • பகுத்தறிவாளர் சிலர் திருக்குறள் வழியே கூறும் 8 குணம்
  1. ஆதிபகவாக முதன்மை பெறுதல்
  2. வாலறிவாக முயலுதல்
  1. மலர்தலின் ஊடே ஏகல்
  2. விருப்புவெறுப்பு இன்மை
  1. வினையின்மை
  2. பொறிகளுக்குப் புலப்படாமை
  1. தனக்கு உவமை இல்லாமை
  2. அறவாழியாய்த் திகழ்தல்

காண்க[தொகு]

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்குணத்தான்&oldid=2941174" இலிருந்து மீள்விக்கப்பட்டது