நீத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியர்[தொகு]

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம் கற்பியல் 51)

விளக்கம்[தொகு]

இறந்து வாழ்பவர்[தொகு]

காம வாழ்க்கை நிறைவுற்ற வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் பாதுகாவலாக இருக்கும் மக்களோடு பின்னிப் பிணைந்து சுற்றத்தாரும் சேர்ந்திருக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அகவை முதிர்ந்த மனைக் கிழவனும் மனைக் கிழத்தியும் இப்படித்தான் வாழவேண்டும் என்று அனைவருக்கும் பயிற்றுவிக்கும் பாங்கோடு உலகியலோடு ஒன்றாமல் விலகியிருந்து வாழ்வதுதான் 'இறந்ததன் பயன்' என்கிறார் தொல்காப்பியர்.

திருவள்ளுவர்[தொகு]

இறைநிலை[தொகு]

திருவள்ளுவர் முதல் நான்கு அதிகாரங்களில் இறைநிலையைக் காட்டுகிறார்.

இறை - முதல் அதிகாரம்[தொகு]

நமக்குள் பகவாகவும், நமக்கு வெளியில் ஆதியாகவும் இறைவன் இருக்கிறான். அவன் நமக்குள் அறிவு, மலரும் மனம், ஆசை முதலானவையாக இருக்கிறான். பிறர் அறிவு, பிறர் மனம், பிறர் ஆசை முதலானவையாக ஒருவனுக்கு வெளியிலும் இருக்கிறான். நம் அனைவரின் அறிவு, மனம், ஆசை முதலானவற்றை யெல்லாம் கடந்தவனாகவும் இருக்கிறான்.

வான் - இரண்டாம் அதிகாரம்[தொகு]

உலகில் உயினம் வாழ உதவும் மழையாக இருக்கிறான்.

நீத்தார்[தொகு]
  • திருவள்ளுவர் நீத்தாரை ஒழுக்கத்து நீத்தார், இறந்தார், நிறைமொழி மாந்தர், அந்தணர் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
  • இறந்தார் என்பதற்குத் தொல்காப்பியர் வழி நின்றால் பொருள் தெளிவாக விளங்கும்.
  • ஒழுக்கத்து நீத்தார் என்பதற்கு இல்லற ஒழுக்கத்தில் இருந்துகொண்டே நீத்தார் என்று தொல்காப்பிய வழியிலேயே பொருள் காண்போமானால் முரண்பாடு இல்லாமல் முடிவதை உணரமுடியும்.
  • உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் என்பதற்குக் கணியன் பூங்குன்றனார் விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் விளக்கம் தெளிவாகும்.
அறம்[தொகு]

மக்களின் கூட்டு வாழ்க்கைக்கு உதவும் அறநெறியாக இருக்கிறான்.

கணியன் பூங்குன்றனார்[தொகு]

'உரம் சாச் செய்யார் உயர்தவம்' (நற்றிணை 226)

ஒருவன் தன் உடலிலும் உள்ளத்திலும் உள்ள தெம்பாகிய உரத்தைச் சாகடிக்காமல் செய்யும் தவமே உயர்தவம் என்கிறார் கணியன் பூங்குன்றனார்.

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீத்தார்&oldid=1461608" இலிருந்து மீள்விக்கப்பட்டது