எச்டி 108147

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 108147 / Tupã

Star map shows star position on the southern edge of the constellation Crux
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Crux
வல எழுச்சிக் கோணம் 12h 25m 46.2673s[1]
நடுவரை விலக்கம் −64° 01′ 19.516″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)6.994[2]
இயல்புகள்
விண்மீன் வகைF8/G0V[2]
B−V color index0.537[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −182.635±0.030[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −60.724±0.027[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)25.84 ± 0.31[1] மிஆசெ
தூரம்126 ± 2 ஒஆ
(38.7 ± 0.5 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு1.27±0.02 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.59±0.15
ஒளிர்வு1.93 L
வெப்பநிலை6265±40 கெ
சுழற்சி8.7 days
சுழற்சி வேகம் (v sin i)5.13 கிமீ/செ
அகவை2.17 பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−63°757, CPD−63°2270, GC 16944, HIP 60644, LTT 4696, SAO 251899[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata

எச்டி 108147, டுபா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிலுவை விண்மீன் குழுவில் உள்ள 7 ஆம் பருமை விண்மீனாகும், இதில் பொலிவான நட்சத்திரமான அக்ரூக்சு அல்லது ஆல்பா சிலுவையுடன் நேரடி வரிசையில் உள்ளது. இது ஒரு மஞ்சள் வெண் அல்லது மஞ்சள் குறுமீன் ( வண்ண வேறுபாடு வகைப்பாட்டிலிருந்து மட்டுமே, வரி தன்னிச்சையானது , ஆனால், உண்மையானது அல்ல), சூரியனை விட சற்று பொலிவாகவும் பெரியதாகவும் இருக்கும். இது F8 V வகையினது ஆகும் அல்லது G0 V. விண்மீனும் சூரியனை விட இளையதும் ஆகும். இது சுமார் 126 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது வெர்ருக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது. தொலைநோக்கி வழி இது எளிதான இலக்காகும். இருப்பினும், அதன் தெற்கு இருப்பிடம் காரணமாக வெப்பமண்டலத்தைத் தவிர வடக்கு அரைக்கோளத்தில் இது எவ்விடத்திலும் தெரிவதில்லை.

2000 ஆம் ஆண்டில் ஜெனிவா புறக் கோல் தேட்டக் குழுவால் ஒரு சூரியப் புறக் கோள் ஒன்று இதைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது.[4] இது " வியாழனை விட சிறிய வளிமப் பெருங்கோளாகும், இது அதன் முதன்மை விண்மீனை 11 நாட்களில் 0.1 வானியலலலகு தொலைவில் சுற்றிவகிறது." இது சூரிய குடும்பத்தில் உள்ள புதனின் வட்டனையை விட மிக அருகில் உள்ளது. [5]

2019, திசம்பரில், பன்னாட்டு வானியல் ஒன்றியம், பராகுவேயின் குரானி மக்களின் கடவுளின் பெயரால் இந்த நட்சத்திரம் டூபா என்ற பெயரைக் கொண்டிருக்கும் என்று அறிவித்தது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 100 ஆம் விழாவில் 2019 உலகளாவிய புற உலகங்களின் பெயரிடல் ,போட்டியுடன் பராகுவேயில் நடுவண் பராகுவே வானியல் தகவல் நிறுவனம் நடத்திய போட்டியின் விளைவாக இந்தப் பெயர் வந்தது.[6]

இதை HD 107148 உடன் குழப்பப்படக்கூடாது. இது கன்னி விண்மீன் தொகுப்பில் 2006 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூரியப் புறக் கோளையும் கொண்டுள்ளது.

எச்டி 108147 தொகுதி[3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Tumearandu >0.40 MJ 0.104 10.901 ± 0.001 0.498 ± 0.025

மேலும் காண்க[தொகு]

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html. Gaia Data Release 1 catalog entry
  2. 2.0 2.1 2.2 "HD 108147". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
  3. 3.0 3.1 3.2 Pepe, F. et al. (2002). "The CORALIE survey for southern extra-solar planets VII. Two short-period Saturnian companions to HD 108147 and HD 168746". Astronomy and Astrophysics 388 (2): 632–638. doi:10.1051/0004-6361:20020433. Bibcode: 2002A&A...388..632P. https://www.aanda.org/articles/aa/full/2002/23/aah3477/aah3477.html. 
  4. European Southern Observatory(April 15, 2000). "Exoplanets Galore!". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: December 30, 2012.
  5. Musgrave, Ian, “Starhopping - The Crux of the Matter” in ‘Sky & Space’ magazine, September–October 2006, Galaxy publishing.
  6. NameExoWorlds Paraguay. http://www.nameexoworlds.iau.org/paraguay. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_108147&oldid=3828786" இலிருந்து மீள்விக்கப்பட்டது