எச்சைலன்
| கிரேக்க நெடுங்கணக்கு | |||
|---|---|---|---|
| Αα | அல்ஃபா | Νν | நியூ |
| Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
| Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
| Δδ | தெலுத்தா | Ππ | பை |
| Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
| Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
| Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
| Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
| Ιι | அயோற்றா | Φφ | வை |
| Κκ | காப்பா | Χχ | கை |
| Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
| Μμ | மியூ | Ωω | ஒமேகா |
எச்சைலன் (Epsilon, கிரேக்கம்: έψιλον) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஐந்து என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே (
) எச்சைலன் பெறப்பட்டது. எச்சைலனிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து E, சிரில்லிய எழுத்து E என்பனவாகும். பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்ததாகக் காணப்படுகின்றது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே எச்சைலன் பெறப்பட்டது. பண்டைய கிரேக்க எழுத்து முறையில் எச்சைலனும் ஈயும் ஒரே மாதிரியாகவே காணப்பட்டன. ஆனால், தற்போது ஈயின் கண்ணாடி விம்பத்தை ஒத்ததாகவே எச்சைலன் எழுதப்படுகின்றது.
பயன்பாடுகள் [தொகு]
பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்திருப்பதால் கிரேக்க மொழியைத் தவிர ஏனைய இடங்களில் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
கணிதம் [தொகு]
கணிதத்தில் உலகத்தொடையைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்து எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.[3] தொடையில் மூலகம், மூலகமன்று என்பனவற்றைக் காட்டுவதிலும் எச்சைலனின் மாறுபட்ட வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[4]
வானியல் [தொகு]
உடுக்கூட்டமொன்றில் ஐந்தாவது துலக்கமான உடுவைக் குறிப்பதற்கு எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.
ஒருங்குறி [தொகு]
| ஒருங்குறி | மாதிரி | விளக்கம் |
|---|---|---|
| U+0395 | Ε | கிரேக்கப் பேரெழுத்து எச்சைலன் |
| U+03B5 | ε | கிரேக்கச் சிற்றெழுத்து எச்சைலன் |
| U+0045 | E | இலத்தீன் பேரெழுத்து ஈ |
| U+0065 | e | இலத்தீன் சிற்றெழுத்து ஈ |
| U+2208 | ∈ | மூலகம் |
| U+2209 | ∉ | மூலகமன்று |