எக்கோ (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்கோ
வகை
உருவாக்கம்மரியன் டேயர்
நடிப்பு
  • அலகுவா காக்சு
  • சாஸ்கே இசுபென்சர்
  • தாண்டூ கார்டினல்
  • டெவரி ஜேக்கப்சு
  • கோடி லைட்னிங்
  • கிரகாம் கிரீன்
  • ஜான் மெக்லார்னான்
  • வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ
  • சார்லி சாக்ஸ்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • கேவின் பிகே
  • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
  • விக்டோரியா அலோன்சோ
  • பிராட் விண்டர்பாம்
  • இசுடீபன் பிரவுஸார்ட்
  • ரிச்சி பால்மர்
  • மரியன் டேயர்
  • ஜேசன் கவின்
படப்பிடிப்பு தளங்கள்அட்லாண்டா பெருநகரப் பகுதி
ஒளிப்பதிவுகிரா கெல்லி
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
Chronology
தொடர்புடைய தொடர்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்

எக்கோ (ஆங்கில மொழி: Echo) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் வெளியான மார்வெல் காமிக்சு கதாபாத்தித்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக மரியன் டேயர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த தொடர் மார்வெல் இசுடியோசு தயாரிப்பில் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொலைக்காட்சித் தொடரின் ஒரு பகுதியாகவும் 2021 ஆம் ஆண்டு வெளியான ஹாக்கி[1] என்ற தொடரின் வழித்தொடரும் ஆகும்.[2]

இது மாயா லோபஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்புவதையும், அங்கு அவர் தனது கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதுடன், தனது பூர்வீக அமெரிக்க குடிகளுடம் மீண்டும் இணைந்திருக்க விருபிக்கிறார், மேலும் அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் அரவணைக்க முயற்சிப்பதே சித்தரிக்கின்றது. இந்த தொடரை சிட்னி பிரீலாண்ட் என்பவர் இயக்க,[3] தலைமை எழுத்தாளராக மரியன் டேயர் என்பவர் பணியாற்றுகிறார். இந்தத் தொடரை 20வது தொலைக்காட்சியும் இணைந்து தயாரித்துள்ளது.

ஹாக்கி தொடரில் இருந்து மீண்டும் நடிகை அலகுவா காக்சு[4][5] என்பவர் மாயா லோபஸ்/எக்கோ என்ற தனது பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். இவருடன் இணைந்து சாஸ்கே இசுபென்சர், தாண்டூ கார்டினல், டெவரி ஜேக்கப்சு, கோடி லைட்னிங், கிரகாம் கிரீன், ஜான் மெக்லார்னான், வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ மற்றும் சார்லி சாக்ஸ்[6][7] போன்ற பலர் நடிக்கிறார்கள். இதன் வழித்தொடர் வளர்ச்சி மார்ச் 2021 இல் தொடங்கியது, ஈடன் மற்றும் எமிலி கோஹன் ஆகியோர் தலைமை எழுத்தாளர்களாக இணைக்கப்பட்டனர், மேலும் அலக்வா காக்சு திரும்பி வருவதை உறுதிப்படுத்தினார். நவம்பர் 2021 இல் இந்தத் தொடர் முறையாக அறிவிக்கப்பட்டது, மரியன் டேயர் தலைமை எழுத்தாளராகப் பணியாற்றுவது தெரியவந்தது, சிட்னி பிரீலாண்ட் என்பவர் மார்ச் 2022 க்குள் இயக்குனராக உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு ஏப்ரல் பிற்பகுதியில் தொடங்கியது மற்றும் செப்டம்பர் 2022 வரை நீடித்ததது,

எக்கோ தொடர் டிஸ்னி+[8] இல் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதி தொடர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Otterson, Joe (December 3, 2020). "'Hawkeye' Series at Disney Plus Adds Six to Cast, Including Vera Farmiga and Tony Dalton (Exclusive)". Variety. Archived from the original on December 3, 2020. பார்க்கப்பட்ட நாள் December 3, 2020.
  2. Moreau, Jordan (March 22, 2021). "'Hawkeye' Spinoff Series About Echo in Early Development for Disney Plus (Exclusive)". Variety. Archived from the original on March 22, 2021. பார்க்கப்பட்ட நாள் March 22, 2021.
  3. Barnhardt, Adam (March 19, 2022). "Marvel's Echo Adds Reservation Dogs Director". ComicBook.com. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் March 20, 2022.
  4. Paige, Rachel (May 17, 2022). "'Echo': Alaqua Cox Returns to the MCU as Maya Lopez in First-Look Image". Marvel.com. Archived from the original on May 17, 2022. பார்க்கப்பட்ட நாள் May 17, 2022.
  5. Flook, Ryan (August 14, 2021). "Hawkeye: Alaqua Cox Shares Casting Search Info for Echo Spinoff Series". Bleeding Cool. Archived from the original on August 14, 2021. பார்க்கப்பட்ட நாள் August 14, 2021.
  6. Arvedon, Jon (April 5, 2022). "Marvel Leak Spoils Daredevil and Kingpin's Next MCU Appearance". Comic Book Resources. Archived from the original on April 5, 2022. பார்க்கப்பட்ட நாள் April 5, 2022.
  7. Anthony, Lund (April 5, 2022). "Daredevil and Kingpin Seemingly Confirmed to Appear Together in New Disney+ Series". MovieWeb. Archived from the original on April 6, 2022. பார்க்கப்பட்ட நாள் April 6, 2022.
  8. Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. Archived from the original on November 12, 2021. பார்க்கப்பட்ட நாள் November 12, 2021.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]